PUBLIC NEWS TV- நரைமுடிக்கு வீட்டிலேயே,தயார் செய்யலாம் இயற்கை ஹேர் 'டை'.

PUBLIC NEWS TV- நரைமுடிக்கு வீட்டிலேயே,தயார் செய்யலாம் இயற்கை ஹேர் 'டை'.

PUBLISHED:25-Dec-2017

 

இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தலைமுடிச் சாயங்களில் பெரும்பாலானவை பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், பக்கவிளைவுகளையும் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம். ஆரோக்கியமான உணவுகளை உண்டும், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டைகளைப் பயன்படுத்தியும் எப்போதும் கருமை நிறக்கேசத்தைப் பெறலாம்;
நரை முடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். அல்லது ரசாயன டை பயன்படுத்த தொடங்குவர். ஆனால் இயற்கை முறையை பயன்படுத்தி நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை கொண்டு வர முடியும். 
மருதாணி பேக் :
மருதாணி செடிகளில் இருந்து மருதாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக விழுதாக்கி கொள்ளுங்கள். இதனுடன் 3 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். 1 ஸ்பூன் காபி தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு தயிர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்திடுங்கள். இந்த பேக்கை தலை முடியில் தடவி காய விடுங்கள். நன்றாக காய்ந்தவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசுங்கள்.

ப்ளாக் டீ :
2 ஸ்பூன் டீ தூளை தண்ணீரில் கொதிக்க விடவும். தண்ணீர் அடர்த்தியாக வரும் வரை கொதிக்க விட்டு பின்பு ஆற வைக்கவும். ஆறிய பின் தலையில் இந்த கலவையை தடவவும். சிறிது நேரம் கழித்து நீரால் தலையை அலசவும். டீத்தூள் பயன்படுத்தும்போது ஷாம்பூவால் தலையை அலசக்கூடாது.
மருதாணி - நெல்லிக்காய் பேக் :
மருதாணி இலை – கைப்பிடி அளவு
நெல்லிக்காய் - 2
காபிக் கொட்டை - சிறிதளவு    
கொட்டைப் பாக்குப் பொடி - 3 டீஸ்பூன். 
அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிடவும். காலையில் இந்த விழுதைக் கேசத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இளஞ்சூடான நீரில் கூந்தலை அலசவும். இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தலைமுடியில் பூசி வரவும்.




Recommended For You