திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்காக மூன்று டிராக்டர்களை வழங்கிய அதானி ஃபவுண்டேஷன்.
சென்னை அதானி ஃபவுண்டேஷன், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை திறம்பட செயல்படுத்த உதவ மூன்று கிராமப் பஞ்சாயத்துகளுக்கு டிராக்டர்களை வழங்கியிருக்கிறது.
அதானி துறைமுகம் மற்றும் அதானி ஃபவுண்டேஷனின் உயரதிகாரிகள் மற்றும் மீஞ்சூர் பஞ்சாயத்து ஒன்றியத்தின் தலைவர் ஜி.ரவி ஆகியோர் முன்னிலையில் பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் துரை சந்திரசேகர் மூன்று டிராக்டர்களை வழங்கினார்.
இதில் தங்கால் பெரும்புலம் கிராமப்பஞ்சாயத்து தலைவர் ஆர்.ஞானவேல், பழவேற்காடு கிராமப்பஞ்சாயத்து தலைவர் மாலதி சரவணன், கோட்டைக்குப்பம் கிராமப்பஞ்சாயத்து தலைவர் கே.சம்பத் ஆகியோர் இந்த டிராக்டர்களை பெற்றுக்கொண்டனர்.