முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி மாவட்ட செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ வழங்கினார்.
தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு கட்சியின் இருவர்ணக் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு இனிப்பு மற்றும் சிக்கன் பிரியாணி ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மாவட்ட பொருளாளர் எம்.ஆனந்தன் , பகுதி அவை தலைவர் என்.திருசங்கு , மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் லயன் வி.தியாகராஜன் , பகுதி துணைச் செயலாளர் யூ.எஸ்.குறளரசன் , இ.குமரவேல் , வழக்கறிஞர் ஜி.ஹரிஹரன் , வழக்கறிஞர் ஆர்.தினேஷ் குமார் , வஜ்ரவேல் என்.ராம்குமார் , பவுல் , வை.மா.கண்ணதாசன் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.