முதல்வர் பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு எம்.எல்.ஏ கே.பி.சங்கர் சிக்கன் பிரியாணி வழங்கினார்.

PUBLISHED:01-Mar-2023

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு எம்.எல்.ஏ கே.பி.சங்கர் சிக்கன் பிரியாணி வழங்கினார். 

தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவொற்றியூர் விண்கோ நகர் பகுதியில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி 5வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

இதில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் சிக்கன் பிரியாணி ஆகியவற்றை வழங்கினார்.

இதன் முன்னதாக கே.வி குப்பத்தில் மிகப்பிரமாண்டமான வைக்கப்பட்டுள்ள கட்சியின் இருவர்ண கொடியினை ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ கே.பி.சங்கர் இனிப்பு வழங்கினார்.

இதில் திமுக நிர்வாகிகள் ராமநாதன் , பாலா உமாபதி , எஸ்.மகேந்திரன் , கருணாநிதி , எஸ்.செல்வம் , டி.மகேந்திரன் , விஜயராகவன் , எம்.கார்த்திக் , நிர்மல் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.




Recommended For You