சென்னையில் நியூபெர்க் டயனாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 14 புதிய உடல் பரிசோதனை மையங்கள் திறப்பு..!

PUBLISHED:15-Apr-2022

Neuberg Diagnostics Launch 14 New Health Checkup Centres in Chennai

நியூபெர்க் டயனாஸ்டிக்ஸ் நிறுவனம் ரத்தப் பரிசோதனை , எக்ஸ்ரே , ஈசிஜி , அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட உடல் பரிசோதனைகளை பொதுமக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கிவருகிறது.

இந்த நிறுவனம் இந்தியா , அமெரிக்கா , தென் ஆப்பிரிக்கா , ஐக்கிய அரபு நாடுகளில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனமாகும் இந்த நிறுவனத்தின் 14 புதிய மையங்கள் சென்னை முழுவதும் திறக்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக மக்கள் நல்வாழ்வு நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர்  கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி , குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். மேலும் மற்ற 13 மையங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினர்.

 

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு நியூபெர்க் டயனாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜி.எஸ்.கே.வேலு சால்வை அணிவித்து பரிசு வழங்கி கவுரவித்தார்.

இதில் நியூபெர்க் டயனாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் மருத்துவர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source