அம்பேத்கர் சிலைக்கு அகில இந்திய சமத்துவ கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

PUBLISHED:14-Apr-2023

அகில இந்திய சமத்துவ கட்சி சார்பில் புரட்சியாளர் பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி திருவொற்றியூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் கிழக்கு  மாவட்ட செயலாளர்  சி.வி.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் மாநில துணைபொதுச்செயலாளர் D.மகாலிங்கம் , மாநில வர்த்தக அணி செயலாளர் ஜி.கே.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வர்த்தக அணி செயலாளர் ஏ.பொன்ராஜ் , மாவட்ட அவைத் தலைவர் ஸ்டீபன் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You