PUBLIC NEWS TV-சினாவுக்கு சாவல்,அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு பணி தீவிரம்!?.

PUBLIC NEWS TV-சினாவுக்கு சாவல்,அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு பணி தீவிரம்!?.

PUBLISHED:02-Dec-2017

புதுடில்லி: அணுசக்தியில் இயங்கும், போர் தாக்குதலுக்கு பயன்படும், ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

கடற்படை தளபதி, சுனில் லன்பா, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அணுசக்தியால் இயங்கக்கூடிய, போருக்கு பயன்படும், ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.

இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ராணுவ வலிமை அதிகரித்து வரும் நிலையில், அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், நம் நாட்டின் தாக்குதல் திறனை வெகுவாக உயர்த்தும். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து, கூட்டமைப்பை உருவாக்க உள்ளன. இந்தியா - பசிபிக் பிராந்தியத்தில் அவசர கால தேவை எழும்போது, நம் கடற்படையின் தயார் நிலையை பிரதிபலிக்கும் வகையில், நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.




Recommended For You