PUBLIC NEWS TV-ஏர்செல் சிம் கார்டை தூக்கி போடாதீங்க.ஏன் தெரியுமா?.

PUBLIC NEWS TV-ஏர்செல் சிம் கார்டை தூக்கி போடாதீங்க.ஏன் தெரியுமா?.

PUBLISHED:28-Feb-2018

சிம் தூக்கி போடாதீங்க...

ஏர்செல் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ள தகவல்

நீண்ட நாட்களாக ஏர்செல் பயன்படுத்தி இருப்போம்.

தற்போது,ஏர்டெல்,ரிலையன்ஸ், போன்ற குறைந்தது 2 அல்லது 3 சிம் பயன்படுத்தி வருகிறோம்

ஏர்செல் கடந்த 2 நாட்களாக டவர் இல்லை....நிதி நெருக்கடியால் இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது'
ஆனால், நீங்கள் அதற்காக கவலைப்பட மாட்டீர்கள்.

ஏனென்றால்,நாம்தான் வேறு சில சிம்கார்டு வைத்திருக்கிறோமோ என நினைப்பீர்கள்..
எப்படியும் வாட்சப், ஃபேஸ்புக் மூலமாக நண்பர்களையோ, உறவினர்களையோ தொடர்பு கொண்டு புதிய நம்பரை கொடுத்து விடலாம் என நினைப்பீர்கள்.
ஆனால் ஒன்றை மறந்து இருப்பீர்கள்.

ஆமாம் ஆதார் கார்டு,ரேஷன் கார்டு, கேஸ், பி.எஃப், பேங்க், ஃபைனான்ஸ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்திற்கும் ஏர்செல் நம்பர் கொடுத்திருப்பீர்கள்…
தற்போது அதை மறந்திருக்க வாய்ப்புண்டு…ஆதலால்,ஏர்செல் நம்பரை தூக்கி எறிந்து விடாதீர்கள்.

உடனடியாக டவர் கிடைத்தவுடன்….ஏர்செல் நம்பரை மாற்றாமல்…வேறு நெட்வொர்க்குக்கு மாற்றி விடுங்கள் ஏனென்றால்
ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கேஸ், பி.எஃப், பேங்க், ஃபைனான்ஸ், போன்றவற்றில் மொபைல் நம்பரை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல தெருத் தெருவாக அலைய விட்ருவாங்க…

பாஸ்வேர்டு மெசேஜ், OTP மெசேஜ் எல்லாவற்றுக்கும் அந்த நம்பர் கொடுத்திருப்பீர்கள்......
பேஸ்புக், வாட்சப், மெயில் போன்றவற்றுக்கு கூட பாஸ்வேர்டு அந்த நம்பர் கொடுத்திருக்கலாம்

TDS RETURN அப்ளை செய்வதற்கு முயலும் போது கூட, பாஸ்வேர்டு கேட்கும் நாம் கொடுத்திருக்கும் ஏர்செல் நம்பருக்கு மெசேஜ் வராது....நம்மால் அப்ளை செய்ய கூட முடியாது.

மூன்றாவது நாளாக முடங்கி இருக்கும் ஏர்செல்
இன்றுடன் மூன்றாவது நாட்களாக ஏர்செல் சேவை முடங்கி உள்ளது
அதற்கான எச்சரிக்கைதான் கடந்த 2 நாட்கள் டவர் இல்லாமல் போன காரணம்.

அவங்களே சீக்கிரம் எல்லோரும் வேறு சேவைக்கு மாற்றிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து இருக்காங்க....

பெரும்பாலும் கிராமப்புற மக்கள் அதிகளவில் ஏர்செல் பயன்படுத்தி வருகிறார்கள்..

அவர்களுக்கு,விவரம் தெரிந்தவர்கள் உதவி செய்தால் கண்டிப்பாக பெரும் சிரமத்திலிருந்து வெளிவர முடியும்.




Recommended For You