PUBLICNEWSTV- பாலியல் புகாரில் சிக்கிய கூகுள் நிறுவனத்தின் நிர்வாகிகள் 48 பேர் பணி நீக்கம்..!

PUBLICNEWSTV- பாலியல் புகாரில் சிக்கிய கூகுள் நிறுவனத்தின் நிர்வாகிகள் 48 பேர் பணி நீக்கம்..!

PUBLISHED:26-Oct-2018

நியூயார்க்:-

பாலியல் புகார்கள் மீது கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் புகார்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

பணியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வந்த பாலியல் புகார் காரணமாக இதுவரை 48 க்கும் அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13 பேர் மூத்த மேனேஜர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஆவர்.

இவர்கள் யாருக்கும் பணிக்கொடை ஏதும்  வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் 2014 ம் ஆண்டு பாலியல் புகார் காரணமாக ,கூகுளின் ஆன்டிராய்டு மொபைல் சிஸ்டத்தை உருவாக்கிய ஆன்டி ரூபின் வெளியேற்றப்படும் போது அவருக்கு 90 மில்லியன் டாலர்கள் பணிக்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.




Recommended For You