கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இந்திய மருத்துவத்துறை ஓமியோபதி மருத்துவ குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ( COVID19 )
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் தடுக்கும் முறைகள் மற்றும் மேலாண்மை வழிகள்.
கொரோனா வைரஸ் ( COVID19 ) என்னும் ஒரு வகை வைரஸ் கிருமி , உடலில் இருமல் முதல் கடுமையான சுவாச நோய்கள் வரை நோய்களை ஏற்படுத்தக்கூடியது.
இந்த கொடிய வகை வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி உள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல் , இருமல் , மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை அடங்கும்.
தொற்று மிகவும் கடுமையாகும் போது நிமோனியா , கடுமையான சுவாச மண்டல நோய்கள் , சிறுநீரக செயலிழப்பு , உயிரிழப்பு கூட நேரிடும்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி , அதே நேரத்தில் ஆரோக்கியமான சளி சவ்வு படலத்தை உருவாக்கவும் , பராமரிக்கவும் உதவுகிறது.
இது கிருமிகளைத் தடுக்க மிகவும் அவசியம்.
இயற்கையாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாறு தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் சாறு 50 மில்லி ,
துளசி சாறு 50 மில்லி ,
இஞ்சி சாறு 10 மில்லி ,
எலுமிச்சை சாறு 5 மில்லி ,
மஞ்சள் தூள் 14 தேக்கரண்டி ,
மற்றும் குடிநீர் 150 மில்லி .
மேற்குறிப்பிட்ட அனைத்து சாறுகளையும் குடிநீரில் கலந்து பின் மஞ்சள் சேர்த்து கலக்கி உடனே அருந்தவும்.
பருகும் அளவு :
பெரியவர்கள் : ஒரு நாளைக்கு இரண்டு முறை 250 மில்லி.
சிறியவர்கள் : ஒரு நாளைக்கு இரண்டு முறை 100 மில்லி.
இயற்கையாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூடான பானம் :
தேவையான பொருட்கள் : தோல் உரித்த இஞ்சி 5 கிராம் ,
துளசி 10 கிராம் ,
தூள் செய்த கருப்பு மிளகு 14 தேக்கரண்டி ,
இடித்த அதிமதுரம் 5 கிராம்
( அதிமதுர வேர் ) ,
மஞ்சள் தூள் 14 தேக்கரண்டி ,
மற்றும் குடிநீர் 250 மில்லி.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க வைத்து வடிகட்டியபின் சூடாக உடனே பருகவும்.
பருகும் அளவு : பெரியவர்கள் : ஒரு நாளைக்கு இரண்டு முறை 50 மில்லி.
சிறியவர்கள் : ஒரு நாளைக்கு இரண்டு முறை 20 மில்லி.