PUBLIC NEWS TV-2,000 ரூபாய் கள்ள நோட்டு, 900 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைது.

PUBLIC NEWS TV-2,000 ரூபாய் கள்ள நோட்டு, 900 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைது.

PUBLISHED:19-Nov-2017

புதுடில்லி:-

பாகிஸ்தானில் அச்சிடப்படும், 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள், டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 900 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, காஷித், 54, டில்லியில், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

காஷித்திடம், 2,000 ரூபாய் மதிப்புள்ள, 330 கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன அவற்றின் மதிப்பு, 6.6 லட்சம் ரூபாய்.போலீசாரிடம், காஷித் கூறியதாவது:-


பாகிஸ்தானில் அச்சிடப்படும் கள்ள ரூபாய் நோட்டுகளை, டில்லி, உ.பி., பீஹார் மாநிலங்களில் வினியோகிக்கும் வேலையை, 15 ஆண்டு களாக செய்து வருகிறேன். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவன், இந்திய எல்லையோர தடுப்பை தாண்டி, கள்ள ரூபாய் நோட்டுகளை வீசி எறிவான். 100 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளுக்கு, தலா, 30 ரூபாய் வீதத்தில், அவன் பெற்றுக் கொள்வான். 2,000 ரூபாய் கள்ள நோட்டை, 900 ரூபாய்க்கு, டில்லி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பேன். கோபால் நகரைச் சேர்ந்த பலர், கள்ள ரூபாய் நோட்டு களை விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு  கூறினார்.
இது குறித்து, போலீஸ் துணை கமிஷனர், குஷ்வாஹா கூறியதாவது:-

டில்லியில் பிடிபட்ட காஷித், சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன். அவனிடம் பிடிபட்ட கள்ள ரூபாய் நோட்டுகள், அதிக தரத்துடன் தயாரிக்கப்பட்டவை. அவற்றில், நீர்க்குறியீடு, பாதுகாப்பு இழை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், கண்டுபிடிப்பது மிகக் கடினம். இருப்பினும், கள்ள ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை, ஒரே சீரியல் எண்ணுடன் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.




Recommended For You