சென்னை :
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மாநிலம் முழுவதும் நேற்று நடந்த போராட்டத்தில் 85 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தின் போது 41 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இதில் வேலூரில் மட்டும் 21 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் சென்னையில் மட்டும் 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான 85 ஆயிரம் பேரும் பத்தாயிரம் பெண்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.