PUBLIC NEWS TV -இராண்டு நிமிடங்களில் இலவசமாக பான் கார்டு பெறலாம்.

PUBLIC NEWS TV -இராண்டு நிமிடங்களில் இலவசமாக பான் கார்டு பெறலாம்.

PUBLISHED:04-Jul-2018

ஒரு சில மாதங்களுக்கு முன்பு பான் கார்டை பெற ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. பிறகு மூன்று நாட்களில் பான் கார்டை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வந்தது.

இந்த e-பான் கார்டினை நாம் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பிறகு பான் கார்டு இரண்டே வாரத்தில் நமது முகவரிக்கு பதிவு தபாலில் வந்து சேர்ந்துவிடும்.

தற்போது பான் கார்டை 2 நிமிடங்களில் பெற்றுக்கொள்ள புதிய வழிமுறையொன்று நடைமுறைக்கு வந்துள்ளது.

2 நிமிடங்களில் பான் கார்டை பெறுவது எப்படி?

incometaxindiaefiling என்ற இணையதளத்திற்கு சென்று Instant e-PAN என்று இருக்கும் லிங்கை கிளிக் செய்தவுடன் Apply instant e-PAN என்று இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

பிறகு Guidelines என்ற பக்கம் வரும் அந்த பக்கத்தின் கீழ் Next என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு உங்களுடைய தலைப்பு, பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் ஆதார் எண் போன்ற தகவல்களை உள்ளீடு செய்து Submit கொடுக்கவும்.

அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும்.

அந்த எண்ணை பதிவு செய்து I agree to validate my Aadhar details With UIDAI டிக் செய்து Submit கொடுக்கவும்.

பிறகு Guidelines for Filling Form பக்கத்தின் கீழ் இருக்கும் Next ஐ கிளிக் செய்யவும்.

இப்போது Personal Details என்ற பக்கம் வரும் அதில் இருக்கும் ஆதார் தகவல்களை சரிபார்த்துவிட்டு தந்தை பெயரை பதிவு செய்துவிட்டு Next ஐ கொடுக்கவும்.

இப்போது Contact and Other Details என்ற பக்கம் வரும் அதில் Source of Income ல் உங்களுடைய வருமான தகவல்களை டிக் செய்யவும். பிறகு உங்களின் முகவரியை சரிபார்த்துக்கொள்ளவும்.

அதன் பிறகு உங்களுடைய கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும். பதிவு செய்துவிட்டு Next ஐ கொடுக்கவும்.

இப்போது AO/Jurisdictional Details என்ற பக்கம் வரும். அதில் உங்கள் பகுதியை தேர்வு செய்துவிட்டு, Next ஐ கொடுக்கவும். Scanned Copy of Signature என்ற பக்கம் வரும், அதில் உங்களுடைய கையெழுத்தை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யவும் மற்றும் அந்தப்பகுதிலே இருக்கும் ஒரு சின்ன பாக்ஸில் டிக் செய்துவிட்டு, நீங்கள் வசிக்கும் ஊர் பெயரினை பதிவு செய்துவிட்டு Submit கொடுக்கவும்.

இப்போது ஒரு சில நொடிகளில் உங்களுடைய பான் கார்டு பார்க்கலாம்




Recommended For You