PUBLICNEWSTV - கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

PUBLICNEWSTV - கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

PUBLISHED:19-Aug-2018

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஒட்டுமொத்த நாடே உறுதுணையாக நிற்பதாக பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளச் சேதங்களை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் ஹெலிகாப்டரில் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.

அதன் பின்னர், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை துணிவுடன் எதிர்கொண்டிருக்கும் கேரள மக்களின் போராட்ட குணத்துக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஒட்டுமொத்த இந்திய நாடே கேரளாவுக்கு உறுதுணையாக நிற்பது மிகவும் பெருமை அளிப்பதாக உள்ளது.

கேரளாவுக்கு தொடர்ந்து உதவிகள் புரிந்து, ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் அனைத்து மாநிலங்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கூறிக் கொள்கிறேன்.

இந்தத் துயரங்களிலிருந்து கேரள மக்கள் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என அந்தப் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.




Recommended For You