PUBLICNEWSTV -பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் இடம் பெறாத சிறப்பம்சங்கள் என்னென்ன?

PUBLICNEWSTV -பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் இடம் பெறாத சிறப்பம்சங்கள் என்னென்ன?

PUBLISHED:25-Aug-2018

 

டெல்லி:-

நரேந்திர மோடியின் சுதந்திர உரையில் இடம் பெறாத சிறப்பம்சங்கள் என்னென்ன?

பிரதம அமைச்சரின் சுதந்திர தின உரை... திட்டங்கள், அறிவிப்புகள், மற்றும் தவிர்க்கப்பட்டவைகள் ஒரு பார்வை

சுதந்திர தின உரை  2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்பு நரேந்திர மோடி தனது ஐந்தாவது சுதந்திர தின உரையை காலையில் நிகழ்த்தினார்.

அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் பற்றியும் பாஜகவின் ஐந்தாண்டு சாதனைகள் பற்றியும் உரையாற்றினார்.

சில சிறப்பம்சங்கள் முக்கியத்துவம் பெரும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உரையில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றியும் தெளிவாக பேசினார்.

பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பு பற்றி அரசியல் ரீதியாக பேசமால், பெண்களை இழிவு செய்யும் கலாச்சார சீர்கேட்டை மாற்றி அமைப்போம் என்று கூறினார்.

இந்த ஆட்சியின் ஐந்தாவது மற்றும் கடைசி உரையில் இடம் பெற்றதெல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் வெற்றிகள் மற்றும் 2019ம் தேர்தலுக்கான முன்னோட்ட உரையாகவே இது அமைந்தது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய சுதந்திர தின உரை

78 நிமிடங்கள் நடைபெற்ற இந்த உரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இது வரை வெற்றிகரமாக நிறைவேறிய அனைத்து திட்டங்களையும் பட்டியலிட்டார். அதில் ஸ்வச் பாரத், பிரதான் மந்திரி ஃபசல் பிமா யோஜனா, முத்ரா லோன்ஸ், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்குதல், ஊழலற்ற இந்தியாவினை உருவாக்குவதல் என்று அவரின் உரையில் நீடித்துக் கொண்டே போனது அவர் ஆட்சியின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்.

செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் ஒரு முன்னோட்டம்

ஆயுஷ்மான் பாரத யோஜனா மற்றும் பாதுகாப்புப் படைப் பிரிவில் வேலை செய்யும் பெண்களுக்கு கமிஷன் அமைப்பது போன்ற வருங்காலத் திட்டங்கள் பற்றியும் சுதந்திர தின உரை அமைந்திருந்தது.

2022ம் ஆண்டிற்குள் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடாக உயர்ந்திருக்கும் என்றார்.

பெண்களுக்கான உரிமை பற்றி பேசிய மோடி, பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது அமைந்திருக்கும் அரசு ஏழை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மோடியின் உரை – சொல்ல மறுத்தது என்ன?

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி பேசும் போது மட்டுமே பாகிஸ்தான் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டின் பெயர்களை பயன்படுத்தவில்லை.

பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் பற்றி பேசிய பிரதமர் எங்கும் சிறுபான்மையினர் நலம் குறித்து பேசவில்லை (முத்தலாக் பிரச்சனைப் பற்றி மட்டுமே  பேசினார் நரேந்திர மோடி 

பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பற்றியெல்லாம் பேசிய நரேந்திர மோடி பசுபாதுகாவல்கள் என்ற பெயரில் அரங்கேறும் வன்முறைகள் பற்றி எங்கும் பேசவில்லை.




Recommended For You