PUBLIC NEWS TV- அதிமுக வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட ஓபிஎஸ் - இபிஎஸ்,க்கு தடை .....!

PUBLIC NEWS TV- அதிமுக வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட ஓபிஎஸ் - இபிஎஸ்,க்கு தடை .....!

PUBLISHED:19-Mar-2019

 

டெல்லி:-

வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தடை ஓ.பி.எஸ் -இ.பி.எஸ்.சுக்கு எதிரான வழக்கு 25-ந்தேதி விசாரணை..!

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தடை கோரிய வழக்கை 25-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் வேட்புமனுவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க கோரி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் ‘‘அ.தி.மு. க.வின் விதிகளின்படி வேட்பாளர்களின் மனுவில் கையெழுத்திட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு மார்ச் 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. ஆனால் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தொடங்குவதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 25-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்தது.




Recommended For You