PUBLIC NEWS TV - பிஜேபி தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதலமைச்சர் சந்திப்பு…!

PUBLIC NEWS TV - பிஜேபி தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதலமைச்சர் சந்திப்பு…!

PUBLISHED:22-Jul-2019

புதுடெல்லி:-

தேதி-22-07-2019

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து புதுடெல்லி புறப்பட்டு சென்றார்.

நேற்று பிற்பகல் பாரதிய ஜனதா கட்சி தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அவர் சந்தித்து பேசினார்.

தற்போதைய அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அமித்ஷாவிடம் அவர் ஆலோசித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேசினார்கள்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமித்ஷாவை அடுத்தடுத்து சந்தித்த நிலையில் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் நாடாளுமன்ற வளாகத்தில் சில முக்கிய மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்.




Recommended For You