PUBLIC NEWS TV-‘காலா’ படத்தின் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு.

PUBLIC NEWS TV-‘காலா’ படத்தின் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு.

PUBLISHED:05-Jun-2018

வழக்கமான டிக்கெட் விலையைவிட ‘காலா’ டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ், மணிகண்டன், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. வருகிற 7-ம் தேதி உலகம் முழுக்க இந்தப் படம் ரிலீஸாகிறது.

படம் வெளியாக இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், கூடுதல் விலைக்கு ‘காலா’ டிக்கெட் விற்கப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஜோரா கைதட்டுங்க... ‘காலா’ திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது. வழக்கமான அதிகபட்சக் கட்டணம் 165.78 ரூபாய்க்குப் பதிலாக, 207.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். இதில் கொடுமை என்னவென்றால், ‘காலா’ திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்  ஏழைப் பங்காளன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.




Recommended For You