PUBLICNEWSTV-மீண்டும் ஹீரோ ஆகிறார் யோகி பாபு, நயன்தாரா அடுத்து மற்றொரு கதாநாயகிக்கு ஜோடி ஆகிறார்!!

PUBLICNEWSTV-மீண்டும் ஹீரோ ஆகிறார் யோகி பாபு, நயன்தாரா அடுத்து மற்றொரு கதாநாயகிக்கு ஜோடி ஆகிறார்!!

PUBLISHED:10-Sep-2018

வடிவேலு, சந்தானம் வரிசையில் நகைச்சுவை யோகி பாபு தற்போது ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாத்தில் உள்ளனர்.

ஹீரோ ஆனார் யோகி பாபு 

காமெடியனாக இருக்கும் நடிகர்கள் பின் ஹீரோவாக அறிமுகமாவது ஒன்றும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல.

பல நடிகர்கள், கடைசியாக சந்தானம் உட்பட, பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து சோலோவாக தங்கள் திறமையை காட்ட முயற்சித்துள்ளனர்.

யோகி பாபுவும் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவுள்ளார்.

டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் யோகி பாபு ஹீரோ, அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறதாம்.

தனியார் செக்யூரிட்டி வேலை செய்யும் யோகி பாபு எப்படி அவர் இருக்கும் இடத்தில் நடக்கும் மிகப்பெரிய குற்றத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பது தான் கதையாம்.




Recommended For You