அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் சிறப்பு காட்சி காலை 5 மணிக்கு கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதால் சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க மாட்டோம் என படக்குழுவினர் உறுதி அளித்ததால் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி தந்திருப்பதால் பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும்,
தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.