PUBLIC NEWS TV -இன்றைய15/10/2017 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV -இன்றைய15/10/2017 12 ராசிபலன்கள்

PUBLISHED:15-Oct-2017

இன்றைய. ராசிபலன்கள் 

                     15-10-2017

         ஞாயிற்றுக்கிழமை🕉🕉🕉🕉

1.மேஷம்

ஆரோக்கியப் பிரச்சினைகள் வரலாம்- எனவே ரெகுலராக உடற்பயிற்சி செய்யவும். வருமுன் காப்பதே நல்ல தீர்வு என்பதை நம்புங்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் லட்சியங்களை பெற்றோரிடம் தெரிவிக்க சரியான நேரம். அவர்கள் முழு ஆதரவு அளிப்பார்கள். நீங்களும் கவனம் செலுத்தி, அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். இன்று உங்கள் துணையுடன் சேர்ந்து ஒரு ஆர்வத்தை தூண்டும் விஷயத்தை செய்ய போகிறீர்கள். அதிர்ஷ்ட எண்: 3

2.ரிஷபம்

பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம். இன்று முதலீட்டை சேர்த்து - நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் - அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். 'பிடிவாதமாக நடந்து கொள்ள வேண்டாம்- ஏனெனில் மற்றவரை அது எளிதில் காயப்படுத்தும். ஒரே இடத்தில் இருந்தாலும் காதல் உங்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து செல்லும் வலிமையுடையது. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் ட்ரிப் செல்வீர்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிமையான மாலை பொழுதை செலவிடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2

3.மிதுனம்

அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் - ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும். காதலிலேயே எப்பொதும் மூழ்கியிருப்பவர்களுக்கு மட்டுமே காதலின் இசை கேட்கும். இன்று அந்த இசையை கேட்டு இந்த உலகில் உள்ள மற்ற எல்லா பாடல்களையும் மறந்துவிடுவீர்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். திருமண வாழ்வை பொருத்த வரையில் இன்று மிக சிறந்த நாள்.அதிர்ஷ்ட எண்: 9

4.கடகம்

குழந்தைப்பருவ நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். அது தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும். குழந்தைப் பருவத்தை இழந்துவிட்டோமே என்ற எண்ணமே உங்கள் கவலை அதிகரிப்பதற்கான காரணமாக அமையலாம். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். ஒரு நண்பர் தன் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் ஆலோசனை கேட்பார். உங்கள் அழைப்பை இழுத்தடித்து பார்ட்னரை வெறுப்பேற்றுவீர்கள். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்கள் அண்டை வீட்டுகார்ர்களுங்கள் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால் உங்கள் பந்தத்தை அசைக்க முடியாது. அதிர்ஷ்ட எண்: 3

5.சிம்மம்

உங்கள் குடும்பம் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பதால் உங்களுக்கு எரிச்சல் ஏற்படும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். இன்று நீங்கள் ஷாப்பிங் சென்றால் உங்களுக்கு அருமையான ஒரு டிரஸ் தேர்வு செய்வீர்கள். திருமண வாழ்க்கையின் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அதனை நிறைவேற்ற தவரினால் அதன் பின் விளைவுகள் நீங்கள் சந்திக்க கூடும். கவனம்.அதிர்ஷ்ட எண்: 2

 

6.கன்னி

காயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். இளைஞர்களை உள்ளடக்கிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள நல்ல சமயம். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் ஒன்றாக அமர்ந்து பேசி அதனை தீர்க்கலாம்.அதிர்ஷ்ட எண்: 9

7.துலாம்

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நண்பர்கள் உங்களை தவறாக வழிநடத்தக் கூடும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இன்று, உங்கள் துணை இந்த உலகிலே சிறந்தவர் நாம் தான் என்ற உணர்வை உங்களுக்கு கொடுக்கும் அதிர்ஷ்ட எண்: 3

 8.விருச்சிகம்

ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைக்கு பெண்களை கேலி செய்யாதீர்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் துணையின் சோம்பேறித்தனத்தால் இன்று உங்கள் அனைத்து வேலைகளும் தாமதப்படும்.அதிர்ஷ்ட எண்: 4

9.தனுசு

சுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். இளைய சகோதரர் அல்லது சகோதரி உங்கள் அறிவுரையைக் கேட்கலாம். சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு இனிமையான சர்ப்ரைசை உங்கள் திருமண வாழ்வில் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1

10.மகரம்

கண்புரை நோய் உள்ளவர்கள் மாசுபட்ட பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் புகை உங்கள் கண்களை மேலும் பாதிக்கலாம். முடியுமானால் சூரிய வெளிச்சத்தில் அதிகம் செல்வதைத் தவிர்த்திடுங்கள். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். இன்று பதற்றமாகவே வைத்திருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் மிகவும் வருந்துவீர்கள். இன்று நீங்கள் ஷாப்பிங் சென்றால் உங்களுக்கு அருமையான ஒரு டிரஸ் தேர்வு செய்வீர்கள். உங்கள் வேலையில் தொய்வு ஏற்படுவதால் உங்கள் சீனியர் கண்டிப்புடன் இன்று நடந்து கொள்வார். அதிர்ஷ்ட எண்: 1

11.கும்பம்

உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத்தான் தெரியும் - எனவே வலுவாக தைரியமாக இருந்து விரைந்து முடிவெடுங்கள். விளைவு எதுவாக இருந்தாலும் ஏற்க தயாராக இருங்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. காதலருடன் வெளியில் செல்லும்போது ஒரிஜினல் தோற்றம் மற்றும் நடத்தையுடன் இருங்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 8

12.மீனம்

அழுத்தத்தை புறக்கணித்துவிட முடியாது. புகையிலை மற்றும் மதுவைப் போல இதுவும் தீராத வியாதியைப் போல பரவி வருகிறது. மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று உங்கள் துணை உங்களை ஒரு தேவதையை போல நடத்துவார். அதிர்ஷ்ட எண்: 6




Recommended For You