இன்றைய ராசிபலன்கள் - (12.01.2018)
வெள்ளிக்கிழமை
ஹேவிளம்பி − மார்கழி.28.ஏகாதசி
1-மேஷம் :
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சந்திராஷ்டம தினமாக இருப்பதால் தொழில் முதலீடுகளில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. செய்தொழிலில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அசுவினி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரணி : அமைதியை கடைபிடிக்கவும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.
2-ரிஷபம் :
கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
ரோகிணி : குறைகளை சரிசெய்வீர்கள்.
மிருகசீரிஷம் : சாதகமான நிலை உண்டாகும்.
3-மிதுனம் :
எதிர்ப்புகளை வெல்வீர்கள். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : நம்பிக்கை மேலோங்கும்.
திருவாதிரை : காலதாமதம் உண்டாகும்.
புனர்பூசம் : கவனத்துடன் செயல்படவும்.
4-கடகம் :
பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். காதல் உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைப்பதற்கு சாதகமான சூழல் அமையும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : சுப விரயம் உண்டாகும்.
பூசம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
ஆயில்யம் : பயணத்தில் எச்சரிக்கைத் தேவை.
5-சிம்மம் :
வாகனப் பயணங்களால் தனலாபம் உண்டாகும். மனதில் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களினால் சுப விரயம் உண்டாகும். பணத்தேவையை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : மனக்கவலைகள் நீங்கும்.
உத்திரம் : இன்பமான நாள்.
6-கன்னி :
பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். நீர்வழி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாரிசுகளால் பெருமைகள் உண்டாகும். வீண் கவலைகளால் மனம் வருந்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்
உத்திரம் : புதிய முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சித்திரை : உறவினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும்.
7-துலாம் :
உறவினர்களால் இலாபம் உண்டாகும். உயர் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
சித்திரை : பொருட்சேர்க்கை ஏற்படும்.
சுவாதி : கீர்த்தி உண்டாகும்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
8-விருச்சிகம் :
எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : சிந்தனையில் மாற்றம் உண்டாகும்.
அனுஷம் : பணியில் மேன்மையான சூழல் அமையும்.
கேட்டை : எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.
9-தனுசு :
குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : காரிய சித்தி உண்டாகும்.
பூராடம் : செயல்திட்டம் அமைப்பீர்கள்.
உத்திராடம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
10-மகரம் :
மூத்த சகோதரர்களால் நன்மைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வாக்குவாதத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : ஞான உபதேசம் கிடைக்கும்.
திருவோணம் : தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : பேச்சில் கவனம் தேவை.
11-கும்பம் :
சுய தொழிலில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். பதவி உயர்விற்கு சாதகமான சூழல் அமையும். பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : பதவி உயர்வு கிடைக்கும்.
சதயம் : வியாபாரத்தில் இலாபம் உண்டாகும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
12-மீனம் :
புண்ணிய வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் உங்களின் மதிப்பு உயரும். பொறுப்புகள் அதிகரிக்கும். மனக்கவலைகள் தீரும். பூமிவிருத்தி உண்டாகும். தொழிலில் முன்னேற்றமான நிலை ஏற்படும். பிரபலமானவர்களின் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
பூரட்டாதி : நற்பேறுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மதிப்பு உயரும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.