இன்றைய ராசிபலன்கள் - (11.01.2018) வியாழக்கிழமை ஹேவிளம்பி − மார்கழி.27.
1-மேஷம் :
அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : மனம் மகிழ்வீர்கள்.
2-ரிஷபம் :
மூத்த சகோதரர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
கிருத்திகை : சுப விரயம் உண்டாகும்.
ரோகிணி : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
மிருகசீரிஷம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
3-மிதுனம் :
பூர்வீக சொத்துகளால் இலாபம் உண்டாகும். நிர்வாகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைப்பதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.
4-கடகம் :
தாய்வழி உறவினர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்தடையும். கடல் மார்க்க வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான நாள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
புனர்பூசம் : பணியில் கவனம் தேவை.
பூசம் : சாதகமான சூழல் அமையும்.
ஆயில்யம் : பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
5-சிம்மம் :
புதிய முயற்சிகளால் பாராட்டப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். புதிய வீடு வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : மேன்மையான நாள்.
பூரம் : பேச்சில் எச்சரிக்கை தேவை.
உத்திரம் : வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
6-கன்னி :
எதிர்பார்த்த தனவரவுகள் உண்டாகும். வாகனம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு இலாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியால் நன்மைகள் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : உறவு நிலை மேம்படும்.
சித்திரை : சாதகமான சூழல் அமையும்.
7- துலாம் :
இளைய சகோதரர்களினால் சுப விரயம் ஏற்படும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் கவலைகள் உண்டாகும். பொருட்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். எதிர்பாலின மக்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : அமைதியை கடைபிடிக்கவும்.
சுவாதி : கவனம் தேவை.
விசாகம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
8-விருச்சிகம் :
குடும்பத்தில் கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் கல்விக்காக சுப விரயங்களை செய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன் உண்டாகும். மற்றவர்களுடைய பணிகளை நீங்கள் மேற்கொள்ள நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்
விசாகம் : வாதத்திறமை வெளிப்படும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
9-தனுசு :
செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். தந்தை பற்றிய கவலைகள் மேலோங்கும். சேமிப்பு உயரும். உங்களின் இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மூலிகையால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.
பூராடம் : இலாபகரமான நாள்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
10-மகரம் :
பணியில் தாமதப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பிறருக்கு உதவும்போது கவனத்துடன் செயல்படவும். பணிகளில் மறைமுகமாக பல பிரச்சனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : புதிய முயற்சிகள் கைகூடும்.
திருவோணம் : காரிய சித்தி உண்டாகும்.
அவிட்டம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
11-கும்பம் :
மூத்த சகோதரர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு குறையும். பொன், பொருள் சேர்க்கைகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆராய்ச்சி பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : மனக்கவலைகள் குறையும்.
சதயம் : தனலாபம் உண்டாகும்.
பூரட்டாதி : உறவு நிலை மேம்படும்.
12-மீனம் :
தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். போட்டிகளில் எச்சரிக்கையுடன் செயல்படவும். சந்திராஷ்டம தினமாக இருப்பதால் பேச்சுகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : அமைதியை கடைபிடிக்கவும்.
உத்திரட்டாதி : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
ரேவதி : உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும்.