PUBLIC NEWS TV-இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV-இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:17-Oct-2017

இன்றைய   ராசிபலன்கள் 

                   17-10-2017

        செவ்வாய்க்கிழமை

1.மேஷம்  

முடியுமானால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். நீங்கள் பலவீனமாக இருப்பதால், பயணம் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். மத இடம் செல்வது அல்லதுஉறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். தீடீரென ஆபீசில் உங்கள் எனர்ஜி குறைந்தது போல தோன்றலாம். இதனால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு மிக போரிங்காக இருக்கும். அது உங்களது சோம்பேரித்தனதால் தான்.அதிர்ஷ்ட எண்: 1

2.ரிஷபம்

உங்கள்  பிள்ளை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியாவிட்டால் திட்டாதீர்கள். அடுத்த முறை நன்றாக எழுதுமாறு ஊக்கம் கொடுங்கள். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். மாலையில் எதிர்பாராத விருந்தினர்கள் உங்கள் இடத்தில் கூட்டமாக சேருவார்கள். அன்புக்குரியவருடன் வெளியில் ஷாப்பிங் செல்லும்போது ரொம்ப கோபமாக இருக்காதீர்கள். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம்  இலக்குகளை அடைவீர்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் திருமண வாழ்விலிருந்து ஒரு சிறு ப்ரேக் தேவையென உங்களுக்கு இன்று  தோன்றலாம். அதிர்ஷ்ட எண்: 9

3.மிதுனம்

வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் - அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் - அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் - வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். இன்று மிக ரொமான்டிக்கான நாளாக இருக்கு ஆனல் சில உடல் நல கோளாறுகள் தோன்றும்.அதிர்ஷ்ட எண்: 7

🕉4.கடகம்

நல்ல உடல் வடிவை பெறுவதற்கு பிட்னெஸும் எடை குறைப்பு முயற்சிகளும் உதவும். உங்கள் செலவுகள் அதிகரித்து மனதை அரிக்கலாம். ஒரு பார்ட்டிக்கு நீங்கள் திட்டமிட்டால் சிறந்த நன்பர்களை அழையுங்கள் - உங்களை உற்சாகப்படுத்த நிறைய பேர் வருவார்கள். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் - ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் - உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். உங்கள் களிப்பான திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.அதிர்ஷ்ட எண்:5

5.சிம்மம்

தாமதமாக ஓவர்டைம் வேலை பார்க்கும் சிலர், சக்தி குறைந்திருப்பீர்கள் - இன்று கடைசியாக உங்களுக்கு இருப்பது ஊசலாட்டமும் அழுத்தம் நிறைந்த நாளும்தான். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் - அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் - கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். அணுகுமுறையில் தாராளமாக இருந்து குடும்பத்தினருடன் நேரத்தை அன்புடன் செலவிடுங்கள். காதலில் ஏமாற்றம் வரலாம். ஆனால் காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் பற்றி பார்ட்னர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். உறவினரால் இன்று உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் மாலையில் அது சரியாகிவிடும். அதிர்ஷ்ட எண்: 9

6.கன்னி

சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் - ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். வீட்டு விவகாரங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு வேலையை சரியாகச் செய்ய முடியாமல் பாதிக்கும். ஒரே இடத்தில் இருந்தாலும் காதல் உங்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து செல்லும் வலிமையுடையது. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் ட்ரிப் செல்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் வெகுமதியும் தள்ளிப் போவதால் - ஏமாற்றம் ஏற்படும் பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக  இருக்கும். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள். உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.அதிர்ஷ்ட எண்: 7

7.துலாம்

உடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் போக முடியாது என்பதால் ஒரு பின்னடைவை சந்திப்பீர்கள். ஆனால் உங்களை முன்னெடுத்துச் செல்ல சரியான வழியை பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். ஒரு நண்பர் தன் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் ஆலோசனை கேட்பார். இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.அதிர்ஷ்ட எண்: 1

8.விருச்சிகம்

குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நீங்கள் நிறைவேற்றத் தவறலாம். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியாது. உங்கள் கவனத்தை சிதறாமல் வைப்பதில்அக்கறைக் காட்டுவதும், நம்பிக்கை இழக்காமல் இருப்பதும் நல்லது. பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். உங்களுக்கு சுமையற்றதைப் போல கருத்தை முன்வைப்பதில் திளைத்துப் போவீர்கள். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். ரொமான்ட்டிக் பாடல்கள், மணம் வீசும் மெழுகுவத்திகள், உற்சாக பானம் என இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடன் இன்பம் தான்.அதிர்ஷ்ட எண்: 3

9.தனுசு

ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். மிக முன்கூட்டியே ஏற்பாடு செய்த பயணத் திட்டம், குடும்பத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக தள்ளிப் போகும். காதலில் ஏற்படும் ஏமாற்றம் உங்கள் தைரியத்தை இழக்கச் செய்யாது. வேலையிடத்தில் தொழில் திறமையை மேம்படுத்த திறன் நிலைகளை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இன்று உங்கள் தேவைகளை உங்கள் துணை நிறைவேற்ற தவறலாம். அதனால் உங்கள் மூட் பாதிக்கும்.அதிர்ஷ்ட எண்: 9

10.மகரம்

ஆன்மிகவாதி ஒருவர் ஆசிர்வாதம் தந்து மன அமைதியை ஏற்படுத்துவார். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். பழைய நண்பர் ஒருவர் உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். செலவுமிக்க எந்த முயற்சியில் கையெழுத்திடுவதற்கு முன்பும் உங்கள் முடிவு செய்யும் திறனை பயன்படுத்துங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.அதிர்ஷ்ட எண்: 8

11.கும்பம்

உங்கள் டென்சனைக் குறைக்க குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுங்கள். உதவிகளை நன்றியுடன் பெற்றுக் கொள்ளுங்கள். உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். பழைய நண்பர்கள் ஆதரவாகவும் உதவியாகவும் இருப்பார்கள். காதலில் உண்மைத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். பார்ட்னர்ஷிப்பில் புதிய முயற்சி தொடங்க நல்ல நாள். எல்லாமே பலன் தந்துவிடாது. ஆனால் பார்ட்னர்களுடன் கைகோர்ப்பதற்கு முன்பு சிந்திக்கவும். தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். திருமண வாழ்க்கையின் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அதனை நிறைவேற்ற தவரினால் அதன் பின் விளைவுகள் நீங்கள் சந்திக்க கூடும். கவனம்.அதிர்ஷ்ட எண்: 6

12.மீனம்

உங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் கூடுங்கள். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். தேவையில்லாத வாக்குவாதம் குடும்பத்தில் டென்சனை ஏற்படுத்தும். வாக்குவாதத்தின் மூலம் கிடைக்கும் வெற்றி நிஜமான வெற்றி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தவரையில் சிந்தனை திறமையால் இதைத் தவிர்க்கப் பாருங்கள். பிரச்சினைகளைத் தீர்க்க மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு, அமைதியாக யோசியுங்கள். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் இன்று காதலரை அது அப்செட் பண்ணாது. உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 4




Recommended For You