PUBLIC NEWS TV- இன்றைய. 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- இன்றைய. 12 ராசிபலன்கள்

PUBLISHED:22-Oct-2017

இன்றைய ராசிபலன்கள்  
         22-10-2017
  ஞாயிற்றுக்கிழமை  
1.மேஷம்
உடல்நலம் குறித்த பிரச்சினைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் - அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். மாலை நேரத்தில் விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடி இனிமையான மற்றும் அற்புதமான நாளாக ஆக்குவார்கள். காதலிலேயே எப்பொதும் மூழ்கியிருப்பவர்களுக்கு மட்டுமே காதலின் இசை கேட்கும். இன்று அந்த இசையை கேட்டு இந்த உலகில் உள்ள மற்ற எல்லா பாடல்களையும் மறந்துவிடுவீர்கள். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். உங்களுக்கும் துணைவருக்கும் இடையில் நிச்சயமாக நம்பிக்கை குறைவு ஏற்படும். இது திருமணத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.அதிர்ஷ்ட எண்: 4
2.ரிஷபம்
ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். கண்டிப்பான போக்கு, குறிப்பாக நண்பர்கள் வட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டும். உறவுகள் துண்டிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அது மோசமான விளைவை ஏற்படுத்தலாம். அன்புக்குரியவரின் நடத்தையில் சந்தேகப் படாதீர்கள். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இன்று உங்கள் துணை உங்கள புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார். அதிர்ஷ்ட எண்: 3
3.மிதுனம்
நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஜாலியாக இருங்கள். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது. புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் சில நேரத்தில் திருமண வாழ்க்கை கடினமாகலாம். இன்று சிறிது சோதனையான நாள்.அதிர்ஷ்ட எண்: 1
4.கடகம்
பலவீனமான உடல் மனதை பாதிக்கும் என்பதால், சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். உங்களிடம் வலு உள்ளது, மனம்தான் குறைபாடு என்பதால், உங்கள் உண்மையான திறமையை நீங்கள் உணர வேண்டும். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். உங்கள் அன்புக்குரியவர் ரொம்ப பிகு பண்ணுவதால் இன்று உங்களுக்கு ரொமான்ஸ் சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். இன்று அதிகமாக உண்ட்தலோ அல்லது குடித்த்தாலோ உங்களின் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்படலாம்.அதிர்ஷ்ட எண்: 5
5.சிம்மம்
உங்கள் உடல்நலம் இன்று சரியாக இல்லாமல் போவதால் - வேலையில் கவனம் செலுத்துவது கஷ்டமாக இருக்கும். சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம். குடும்பத்தினர் அல்லது வாழ்க்கைத் துணைவர் சில டென்சனை ஏற்படுத்தலாம். இன்றைக்கு உங்கள் காதலர் அவசியமற்ற கோரிக்கைகளை வைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். கோபத்தினால் சந்தேகம் தோன்றலாம் ஆனல் அது தவறென்று உங்களுக்கு தெரியும். இருந்தாலும் உங்கள் பந்தத்தின் மேல் சந்தேகம் தோன்றக்கூடும். அதிர்ஷ்ட எண்: 3

6.கன்னி

உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல - சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். பணத்தைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்பதுதான் இன்றைய வார்த்தைகளாக இருக்கிறது. திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல சமயம். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும். அதிர்ஷ்ட எண்: 1

7.துலாம்

உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. பார்ட்னர் உங்களை கைவிடுவார். இது திருமணத்தையே முறிக்கலாம். அதிர்ஷ்ட எண்: 4

8.விருச்சிகம்
பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். உங்களின் தேவைகளை நண்பர்களும் உறவினர்களும் புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிவீர்கள் - உங்களுக்காக மற்றவர்கள் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, உங்கள மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் உங்கள் காதலர் இன்று கணிக்க முடியாத மனநிலையில் இருப்பார். எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும். இன்று உங்கள் துணை தனது இனிமையான பக்கத்தை காட்டுவார். அதிர்ஷ்ட எண்: 5
9.தனுசு
உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து உடலை பிட்டாக வைத்திடுங்கள். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். 'பிடிவாதமாக நடந்து கொள்ள வேண்டாம்- ஏனெனில் மற்றவரை அது எளிதில் காயப்படுத்தும். உங்கள் ரொமான்சில் மிக மோசமான நிலையை சந்திப்பீர்கள், அது உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் துணைக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டியது திருமண பந்த்த்தின் எழுதப்பாத விஷயமாகும் அதனை நீங்கள் நெடு நாட்களாக செய்ய தவறி விட்டீர்கள். அதிர்ஷ்ட எண்: 2
10.மகரம்
குழந்தைப்பருவ நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். அது தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும். குழந்தைப் பருவத்தை இழந்துவிட்டோமே என்ற எண்ணமே உங்கள் கவலை அதிகரிப்பதற்கான காரணமாக அமையலாம். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும் - முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தினர் அப்செட் ஆவார்கள். காதல் இன்று குறைந்த உற்சாகத்துடன் இருக்கும். தொடர்புகொள்ளும் நுட்பத்துக்கும், வேலைத் திறனுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வின் கடினமான நாளாகும். அதிர்ஷ்ட எண்: 2
11.கும்பம்
உங்களின் அபரிமிதமான சிந்தனை திறன், இயலாமையை எதிர்த்துப் போரிட உதவும். பாசிடிவ் சிந்தனைகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். ரொமாண்டிக்கான நினைவுகள் இன்றைய நாளில் ஆக்கிரமித்திருக்கும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை.அதிர்ஷ்ட எண்: 9
12.மீனம்
நம்பிக்கையும் சக்தியும் இன்று அதிகமாக இருக்கும். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 7




Recommended For You