PUBLIC NEWS TV -25/10/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV -25/10/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:25-Oct-2017

இன்றைய   ராசிபலன்கள்  
                  25-10-2017
        புதன்கிழமை
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
1.மேஷம்
உடல் திறனை பராமரிக்க விளையாட்டில் சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். இன்று கவனத்துடன் வேலை செய்யாவிட்டால் உங்கள் சீனியர்களிடமும் உங்களுடன் பணிபுரிபவர்களிடமும் உங்கள் நன்மதிப்பை இழக்க கூடும். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.அதிர்ஷ்ட எண்: 2
2.ரிஷபம்
புகையிலை பழக்கத்தை ஒழிக்க சரியான நேரம் இது. இல்லாவிட்டால் பிற்காலத்தில் அதைக் கைவிடுவது மிகவும் கஷ்டமாகிவிடும். அது உடல் நலனுக்கு விரோதியாக இருப்பதுடன் மூளை செயல்பாட்டையும் பாதிக்கும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். காதலில் உண்மைத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் துணை இன்று சிறிது வித்யாசமாக நடந்து கொள்வார். அது உங்களை காயப்படுத்தும்.அதிர்ஷ்ட எண்: 1
3.மிதுனம்
உங்கள் உற்சாகத்தை அதிகரிக்க மனதில் அழகான, மதிப்புமிக்க படத்தை பதிய வையுங்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இவ்வளவு நால் நீங்கள் எந்த வேலையை செய்ய வேண்டமென இத்தனை நாள் தட்டிக் கழித்து வந்தீர்களோ அதனை இன்று செய்ய நேரும். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு மிக போரிங்காக இருக்கும். அது உங்களது சோம்பேரித்தனதால் தான்.அதிர்ஷ்ட எண்: 8
4.கடகம்
ஒவ்வொருவரும் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்ய வைத்து இனிய மன நிலையில் வைக்கும். உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. உங்களது நற்செய்கைகளுக்காக வேலையில் இன்று நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும். அதிர்ஷ்ட எண்: 3
5.சிம்மம்
உங்கள் சகோதரரின் வேலையில் ரெகுலராக தலையிட்டு அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவீர்கள். தேவையில்லாத இடங்களில் அறிவுரைகள் கூறாதீர்கள். உங்கள் கருத்துக்கு வரவேற்பு இல்லாத இடங்களில் அமைதியாக இருங்கள். எல்லோரிடமும் அன்பாக இருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். நீங்கள் அக்கறை காட்டக் கூடியவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். அன்புக்குரியவருடன் வெளியில் ஷாப்பிங் செல்லும்போது ரொம்ப கோபமாக இருக்காதீர்கள். ஆபீசில் உங்கள் டீமில் அதிகம் வெறுப்பேற்றும் நபர் இன்று மிக இணக்கமாக உங்களிடம் நடந்து கொள்வார். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். ஒரு இழப்பு உங்க திருமண வாழ்வை இன்று பாதிக்கும். அதிர்ஷ்ட எண்: 1

6.கன்னி
உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் - குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. நண்பர்களுடன் உற்சாகமான, பொழுதுபோக்கான நிகழ்வை முடிவு செய்ய பொருத்தமான நாள். உங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். இன்று உங்கள் மனதில் படும், பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் துணையை இன்று ஒரு ரொமான்டிக் டேட்டுக்கு சென்றால் உங்கள் உறவு வலுப்படும்.அதிர்ஷ்ட எண்:8
7.துலாம்
புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் - உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய - ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது? குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால், அவர்கள் சங்கடப்படுவார்கள். நீங்கள் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையில் அது தடையைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். நிறைய சாதிக்கும் திறமை உங்களுக்கு உள்ளது - எனவே உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும்.அதிர்ஷ்ட எண்: 2

8.விருச்சிகம்
உங்கள் மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்குங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். வேலையில் மெதுவாக நடக்கும் முன்னேற்றம் சிறிய டென்சன்களை உருவாக்கும். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். இன்று, உங்கள் துணையுடன் வேளியே சென்று உல்லாசமாக பொழுதை கழிப்பீர்கள்.அதிர்ஷ்ட எண்: 4
9.தனுசு
மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளை இன்று புரிந்து கொள்ளுங்கள். தேவையான நேரத்தில் வேகமாக செயல்படுவதன் மூலம் பாராட்டு பெறுவீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். செக்ஸ் மட்டும் தான் திருமண வாழ்க்கை என சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 1
10.மகரம்
சில கிரியேட்டிவ் வேலையில் ஈடுபாடு காட்டுங்கள். வெறுமனே அமர்ந்திருக்கும் பழக்கம் மன அமைதிக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். இன்று சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள் - ஆனால் யதார்த்தமாக இருங்கள். உதவி செய்பவர்களிடம் அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள். உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். இன்று கடினமான நாள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். ஒரே வீட்டில் ஒருவருடன் இணைந்து வாழும்போது சண்டைகள் ஏற்படுவது இயல்பு. இன்று உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 1
11.கும்பம்
உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். உங்கள் இதயதுடிப்பு உங்கள் துணையின் துடிப்புடன் இணைந்து இன்று இனிய தாளம் போடும். இன்று கவனத்துடன் வேலை செய்யாவிட்டால் உங்கள் சீனியர்களிடமும் உங்களுடன் பணிபுரிபவர்களிடமும் உங்கள் நன்மதிப்பை இழக்க கூடும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள்.அதிர்ஷ்ட எண்: 7
12.மீனம்
வேலையில் ஏற்படும் அழுத்தம் இன்று சிறிது அழுத்தம் மற்றும் டென்சனை ஏற்படுத்தலாம். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது - அல்லது ஷாப்பிங் செய்வது மிகுந்த ஆனந்தம் தருவதாகவும் உற்சாகமாகவும் இருக்கும். இன்ட்ரஸ்டிங்கான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. இன்று, உங்களது துணையுடன் உங்கள் வாழ்கையிலேயே மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 5




Recommended For You