PUBLIC NEWS TV-இன்றைய ராசிபலன்கள்

PUBLIC NEWS TV-இன்றைய ராசிபலன்கள்

PUBLISHED:30-Oct-2017

இன்றைய ராசிபலன்கள் 

 30-10-2017
                        திங்கட்கிழமை 
1.மேஷம்

உங்களுக்கு நல்ல நேரம் காத்திருப்பதால் உற்சாகமாக இருங்கள். உங்களுக்கு கூடுதல் சக்தியும் கிடைக்கும். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் - அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். உங்கள் வீட்டுக் கடமைகளை புறக்கணித்தால் உங்களுடன் வாழும் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாவார். காதலில் ஏமாற்றம் வரலாம். ஆனால் காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் துணைக்கு அடிகடி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துங்கள். இல்லை என்றால் அவருக்கு நீங்கள் முக்கியம் இல்லையென்று தேன்றலாம். அதிர்ஷ்ட எண்: 5

2.ரிஷபம்

உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்திருந்தால் பொழுதுபோக்கு மகிழ்வாக இருக்கும். ரொமாண்டிக்கான நினைவுகள் இன்றைய நாளில் ஆக்கிரமித்திருக்கும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். பழைய சுவையான அனுபவங்களை இன்று அசை போட்டு மீண்டும் உங்கள் துணையுடன் இன்பமாக பொழுதை கழிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 4

3.மிதுனம்

உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிட வேண்டும். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற செயல்களில் பிள்ளைகள் அதிக நேரத்தை செலவிடுவார்கள். உங்கள் காதல் துணையில் மற்றொரு இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். பல்வேறு விஷயங்கள் ஒப்புதல் இல்லாத காரணத்தால் இந்த நாள் மிக நல்லதாக இருக்காது. இது உங்கள் உறவை பலவீனமாக்கும். அதிர்ஷ்ட எண்: 2

4.கடகம்

மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானதாக இருக்கும் நாள். காதல் இன்று குறைந்த உற்சாகத்துடன் இருக்கும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். இன்று, திருமண வாழ்வின் மோசமான பக்கத்தை காண நேரிடும். 
அதிர்ஷ்ட எண்: 6

5.சிம்மம்

பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். ஊகங்களால் லாபம் கிடைக்கும். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட நிலைக்கு மேல் அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் சில விஷயங்களைத் தொடாமல் விட்டுவிடுவதே நல்லது. காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். உங்கள் நீண்ட நாள் ஆசையை உங்கள் துணை இன்று சர்ப்ரைசாக நிறைவேற்றுவார். மற்றவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் அருமையான துணையின் அன்பான அரவணைப்பை இன்று உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 4

6.கன்னி

உணர்ச்சிபூர்வமாக நீங்கள் மிக்க நிலையான எண்ணத்தில் இருக்க மாட்டீர்கள் - எனவே எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதிலும் மற்றவர்கள் முன் என்ன சொல்கிறீர்கள் என்பதிலும் எச்சரிக்கையாக இருங்கள். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. உணர்ச்சியமான ரிஸ்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ரொமான்ஸ் வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் உறவில் பாதிப்பு வரலாம். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 2

7.துலாம்

இன்று அமைதியாக - டென்சன் இல்லாமல் இருங்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். பெற்றோரின் ஆரோக்கியத்தை நீங்கள் புறக்கணித்தால் ஆபத்தாக அமைந்து, நோய் தீர ரொம்ப காலமாகிவிடும். உடனடி நிவாரணம் பெற ஒரு டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். திருமணங்கள் ஏன் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்று இன்று நீங்கள் உணர்வுபூர்வமாக தெரிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 5

8.விருச்சிகம்

சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். பாசிடிவான மற்றும் ஆதரவான நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். காதல் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும்.அதிர்ஷ்ட எண்: 7

9.தனுசு

வீட்டுக் கவலைகள் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். வீட்டில் இணக்கத்தை ஏற்படுத்த நெருக்கமான ஒத்துழைப்பாக செயல்படுங்கள். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். உங்களுக்கும், துணைவருக்கும் இடையில் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது உங்கள் நீண்டகால உறவுக்கு நல்லதாக இருக்காது. அதிர்ஷ்ட எண்: 4

10.மகரம்

தவிர்க்க முடியாத சில விருந்ந்தினர்களை சந்திக்கும்போது உங்கள் உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்யுங்கள். இப்போதைய தேவை சுய கட்டுப்பாடுதான். அதுதான் உங்கள் இயல்பின் சாரம். இந்த சந்திப்பு உங்களுக்குப் பயன் தரும் என்பதால் மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை. செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். ஷாப்பிங் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது - ஆனால் முக்கியமில்லாத பொருட்களுக்கு நீங்கள் செலவு செய்யாவிட்டால் துணைவரை அப்செட் செய்வீர்கள். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் இன்று உங்கள் துணையுடன் இன்பமாக கழிக்கும் சிறப்பான நாள். அதிர்ஷ்ட எண்: 4

11.கும்பம்

மகிழ்ச்சி நிரம்பிய நல்ல நாள் புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். 'பிடிவாதமாக நடந்து கொள்ள வேண்டாம்- ஏனெனில் மற்றவரை அது எளிதில் காயப்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏஞ்சலை போல நடந்து கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்: 1

12.மீனம்

உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள தனிப்பட்ட உறவுகளை தவறாகப் பயன்படுத்துவது உங்கள் மனைவிக்கு கவலையை ஏற்படுத்தும். உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை காண நீங்கள் ரிலாக்ஸ் பண்ண முயற்சிக்க வேண்டும். தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே உங்கள் மனைவிக்கு நீங்கள் உணர்ச்சிகரமான ஆதரவை அளிக்க முடியும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று, அருமையான திருமண பந்த்த்தின் இனிமையை தெரிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 8




Recommended For You