PUBLI/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLI/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:04-Nov-2017

      இன்றைய   ராசிபலன்ள்
                    04-11-2017
              சனிக்கிழமை

                1.மேஷம்

சில மனமகிழ் நிகழ்ச்சிக்காக சீக்கிரம் அலுவலகத்தைவிட்டு வெளியே செல்லுங்கள். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். உங்களின் கூடுதல் தாராள நடத்தையை உறவினர்கள் அதிகமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பார்கள். உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஏமாற்றப்படுவீர்கள். ஓரளவுக்கு தாராள மனது நல்லது னால் அது வரம்பு மீறினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். முக்கியமான பிசினஸ் முடிவுகள் எடுக்கும்போது பிறருடைய நெருக்குதலுக்கு பணியாதீர்கள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.அதிர்ஷ்ட எண்: 3

                 2.ரிஷபம்

உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். மாலையில் குழந்தையுடன் சிறிது நேரத்தை இனிமையாகக் கழித்திடுங்கள். காதலில் இன்று உங்களின் முடிவெடுக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். இன்று ஆபீசில் சிறிது கடினமான நாள் போல் தோன்றுகிறது. இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். இன்று மிக ரொமான்டிக்கான நாள். சுவையான உணவு, அற்புதமான நறுமணம், குதூகலம் நிரம்பிய இனிய பொழுது உங்கள் துணையுடன்.அதிர்ஷ்ட எண்: 2

                 3.மிதுனம்

பல் வலி அல்லது வயிற்று வலி உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உடனடி நிவாராணத்துக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் - ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழித்து நல்ல குணங்களை கற்றுக் கொடுங்கள். தங்களின் பொறுப்புகளை அவர்கள் உணரட்டும். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். இன்று உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒரு ஹலோ சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இன்று உங்கள் துணை நல்ல ரொமான்டிக் மூடில் இருக்கிறார்.அதிர்ஷ்ட எண்: 9

                     4.கடகம்

இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். பெயரளவில் தெரிந்தவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். வேலையில் மற்றவர்களை கையாளும் போது அறிவும் பொறுமையும் - எச்சரிக்கையும் தேவை. பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். உங்களுக்குள் நிகந்த சிறு ஊடலை மறந்து உங்கள் வாழ்க்கை துணை அன்புடன் தழுவிக்கொள்வார்.அதிர்ஷ்ட எண்: 4
                     5.
சிம்மம்

நீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்தமனதுடன் கூடிய செயல்களால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும் - எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் புதிய நட்புகள் உருவாகும். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். வேலையில் மெதுவாக நடக்கும் முன்னேற்றம் சிறிய டென்சன்களை உருவாக்கும். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணையின் இதமான அன்பைனை இன்று நீங்கள் உணர்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 2

                6.கன்னி

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். பானங்களில் இருந்து தள்ளியிருங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். உங்கள் துணைவரிடம் ரகசிய தகவலை பகிர்ந்து கொள்ளுமுன் யோசியுங்கள். முடிந்தால் அதைத் தவிர்க்கப் பாருங்கள். அவர் வேறு யாரிடமாவது அதை சொல்லக் கூடும். அன்பான புன்னகையின் மூலம் உங்கள் காதலின் நாளை பிரகாசமாக்குங்கள். இன்று வேலையில் அனைத்தும் நன்றாகவே இருக்கும். உங்களது மூட் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் - மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 9
                   7.
துலாம்

வெறுப்பு உணர்ச்சி உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்துவிடாதீர்கள். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். ஒரு பார்ட்டிக்கு நீங்கள் திட்டமிட்டால் சிறந்த நன்பர்களை அழையுங்கள் - உங்களை உற்சாகப்படுத்த நிறைய பேர் வருவார்கள். ஒருவருடைய தலையீடு காரணமாக உங்கள் மனதிற்கினியவருடன் உறவு பாதிக்கப்படலாம். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.அதிர்ஷ்ட எண்: 3

               8.விருச்சிகம்

ஆரோக்கியத்திற்கும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். திடீரென யாருடனும் ஒட்டாதீர்கள், அது வருத்தத்தைக் கொண்டு வரும். பங்குதாரர் வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் எழுத்துமூலமாக பதிவு செய்யுங்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்களிடம் சொல்லப்படும் அலோசனைகளும் உங்களை பற்றி கூறப்படும் கருத்துக்களும் உங்கள் மூடை பாதிக்கக்கூடும்.அதிர்ஷ்ட எண்: 5

                   9.தனுசு

பெற்றோரின் ஆரோக்கியம் கவலை தரலாம் பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். காலம் பொன் போன்றது என்பதை நீங்கள் நம்பினால், அதிகபட்ச உயரமான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று உங்கள் துணையுடன் ஓய்வாக பொழுதை கழிப்பீர்கள்.அதிர்ஷ்ட எண்: 2

              10.மகரம்

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் - நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். தொழில் ரீதியாக குறிக்கோள்களை அடைவதற்கான வவியில் சக்தியை செலவட சரியான நேரம் இது. தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று காதல் செய்ய இனியான பொழுது உங்கள் இருவருக்கும் வாய்க்கும்.அதிர்ஷ்ட எண்: 2
                 
11.கும்பம்

நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். நண்பர்களுடன் உற்சாகமான, பொழுதுபோக்கான நிகழ்வை முடிவு செய்ய பொருத்தமான நாள். யதார்த்தத்தை பார்க்கும்போது காதலரை மறக்க வேண்டும். ஒரு குழுவை ஒருங்கிணைந்து கூட்டாக ஒரு லட்சியத்தை நோக்கி செயல்பட வைக்கும் வலுவான நிலையில் இருப்பீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். உறவினரால் இன்று உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் மாலையில் அது சரியாகிவிடும்.அதிர்ஷ்ட எண்: 8

                    12.மீனம்

உங்கள் சகோதரரின் வேலையில் ரெகுலராக தலையிட்டு அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவீர்கள். தேவையில்லாத இடங்களில் அறிவுரைகள் கூறாதீர்கள். உங்கள் கருத்துக்கு வரவேற்பு இல்லாத இடங்களில் அமைதியாக இருங்கள். எல்லோரிடமும் அன்பாக இருங்கள். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்களுக்கும் காதலருக்கும் இடையில் இன்று வேறொருவர் வரலாம். மகிழ்ச்சியுடன் பிசினஸை கலக்காதீர்கள். தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். உங்கள் துணை கொடுக்கும் இன்ப அதிர்ச்சியில் இன்று நீங்கள் குஷியாகிவிடுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 6
 




Recommended For You