PUBLIC NEWS TV- 5/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 5/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:05-Nov-2017

இன்றைய 12   ராசிபலன்
                    05-11-2017
         ஞாயிற்றுக்கிழமை


              1 .மேஷம் 

முன்கோபத்தால் சில பிரச்சினை ஏற்படலாம். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட நிலைக்கு மேல் அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் சில விஷயங்களைத் தொடாமல் விட்டுவிடுவதே நல்லது. இன்று முட்டாள்தனமான காதல் உங்களுக்கு வரலாம். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். தனையே அறியாமல் உங்கள் துணை செய்யும் ஒரு விஷயம் இன்று உங்கள் நாளை மறக்க முடியாததாக்கும்.அதிர்ஷ்ட எண்: 3

           2.ரிஷபம்

தேவையில்லாத டென்சனும் கவலையும் உங்கள் வாழ்வில் சாராம்சத்தை வடியச் செய்து உங்களை சாய்த்துவிடும். இவற்றை ஒழித்துவிடுவது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் பிரச்சினைகளை இவை அதிகரிக்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்கள் நாளை டல்லாக்கும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் மற்றவரின் தலையீட்டால் இன்று உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம்.அதிர்ஷ்ட எண்: 3

 

             3.மிதுனம்

குடும்பத்திற்காக உங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்வீர்கள். ஆனால் அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்க வேண்டும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். இன்று சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள் - ஆனால் யதார்த்தமாக இருங்கள். உதவி செய்பவர்களிடம் அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் வாழ்க்கையில் உள்ள குழப்பங்களை காரணம் காட்டி இன்று உங்கள் துணை சண்டையிடக்கூடும்.அதிர்ஷ்ட எண்: 1

                 4.கடகம் 

புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். காதலுக்கு உரியவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் அவர்கள் மன உளைச்சல் அடைவார்கள். பனிக்கட்டியை போல வருந்தாதீர்கள், இன்று கவலைகள் உருகிவிடும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவரை ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்களை இன்று நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.அதிர்ஷ்ட எண்: 4

                 5.சிம்மம்

உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள தனிப்பட்ட உறவுகளை தவறாகப் பயன்படுத்துவது உங்கள் மனைவிக்கு கவலையை ஏற்படுத்தும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். மாலையில் நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள் - அது நிறைய நல்லதை செய்யும். உங்களுடைய டார்லிங் பரிசுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவரை ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்களை இன்று நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 3

              6.கன்னி

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். 'பிடிவாதமாக நடந்து கொள்ள வேண்டாம்- ஏனெனில் மற்றவரை அது எளிதில் காயப்படுத்தும். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். குழப்பங்களோ அல்லது அலுவலக பாலிடிக்சோ எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் ஆளுமை செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 1

               7. துலாம்

கவனமாக வண்டி ஓட்டவும், குறிப்பாக இரவு தாமதமான நேரத்தில் பயணம் செய்யும்போது. விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது. சிறிய வேறுபாடுகள் எழலாம் என்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். இன்று கடினமான நாள்.
அதிர்ஷ்ட எண்: 3

                  8.விருச்சிகம்

ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது வெறுப்பை ஏற்படுத்தலாம். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது. தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள்
அதிர்ஷ்ட எண்: 5

                    9.  தனுசு

உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். வேலைகளை முடிக்க நீங்கள் முயற்சி செய்வதால் மனநிலை மற்றும் திட்டங்களில் மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும். காதலில் மெல்ல ஆனால் உறுதியாக முன்னேறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.
அதிர்ஷ்ட எண்: 2

                 10.மகரம்

வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள். பிறரின் நன்மைக்காக பயன்படுத்தாவிட்டால், அழுகிவிடும் இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மனதிற்கினியவரின் கடுமையான வார்த்தைகளால் மனம் சஞ்சலப்பட்டிருக்கும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உறவினரால் உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: 2

                  11.கும்பம்

ஒரு நண்பருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு முன்கோபத்தை ஏற்படுத்தும். தேவையற்ற டென்சனைத் தவிர்க்க, உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். உங்களுடன் வாழ்பவர் உள்ளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார் - அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார். சிறிய அளவில் அன்பையும் கனிவையும் காட்டி இந்த நாளை விசேஷமானதாக ஆக்குங்கள். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் - மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9

                           12.மீனம்

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உடலை பிட்டாக வைத்துக் கொள்ள ரெகுலராக ஹெல்த் கிளப்புக்கு செல்லுங்கள். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் காதலரின் அவசியமில்லாத தேவைக்கு அடிபணியாதீர்கள். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணையின் கடினமான இன்னொரு பக்கத்தை இன்று காண்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 7

 




Recommended For You