PUBLIC NEWS TV- 8/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 8/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:08-Nov-2017

 இன்றைய   ராசிபலன்கள்
                  08-11-2017
                          புதன்கிழமை 

         1.மேஷம்

மோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். வாக்குவாதங்கள், ஒப்புதல் இல்லாமையால் வீட்டில் சிறிது டென்சன் ஏற்படலாம். கோளாறான உங்களின் நடத்தை அன்புக்குரியவருடன் மோதலை ஏற்படுத்தும். வேலை நேரத்தில் சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் இன்று சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. உங்கள் துணையுடனான உங்கள் மன ரீதியான பிணைப்பு குறித்து உங்களுக்கு சந்தேகம் தோன்றும். ஆனால் அது நிஜமல்ல.

அதிர்ஷ்ட எண்: 4

         2.ரிஷபம்

நண்பரை தவறாகப் புரிந்து கொள்வதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் - எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு சமமாக விசாரிக்கவும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் - உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். உங்கள் துணையின் மூசமான மூடும் உடல் நிலையும் உங்கள் நாளை பாதிக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 5

         3.மிதுனம்

இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். மற்றவர்கள் மீது உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் - மோதல்களைத் தவிர்ப்பதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்க வேண்டும். காதலில் உண்மைத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். இன்று ஆபீசில் நாள் முழுக்க சிறிது மூட் அவுட்டாக இருப்பீர்கள். அதனால் உங்கள் வேலையின் தரம் பாதிப்படையலாம். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள் - சிலர் செஸ், குறுக்கெழுத்து விளையாடுவீர்கள்.- மற்றவர்கள் கதை- கவிதை எழுதுவீர்கள் அல்லது எதிர்கால திட்டங்களை தயாரிப்பீர்கள். இன்று உங்களை சுற்றி உள்ள அனைத்தும் சவாலாகவே அமையும். உறுதியுடன் செய்ல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 7

        4.கடகம்

உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தக் கூடிய சுய மேம்பாட்டுத் திட்டங்களில் சக்தியை செலவிடுங்கள். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். உங்கள் நீண்ட நாள் ஆசையை உங்கள் துணை இன்று சர்ப்ரைசாக நிறைவேற்றுவார். உங்கள் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது உங்களுக்கு இன்று தோன்றலாம் எனவே பொறுமை தேவை. நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. இந்த உலகமே இன்று முடிவதாய் இருந்தாலும் உங்கள் துணையின் அன்பான பிடியில் இருந்து உங்கலை யாராலும் விலக்க முடியாது.

அதிர்ஷ்ட எண்: 3

            5.சிம்மம்

மாலை நேரம் பதற்றம் நிறைந்ததாக உணர்வுகளின் கலப்பாக இருக்கும். ஆனால் கவலைப்பட ஏதும் இல்லை - ஏனெனில் ஏமாற்றத்தைவிட மகிழ்ச்சி அதிக ஆனந்தம் தரும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். குடும்பத்தினர் - குழந்தைகள் மறறும் நண்பர்களுடன் செலவிடும் நேரம், உங்கள் சக்தியை புதுப்பிக்க முக்கியமானதாக இருக்கும். இன்று காதலில் விழுவது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். தீடீரென ஆபீசில் உங்கள் எனர்ஜி குறைந்தது போல தோன்றலாம். இதனால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். மற்றவர் உங்களை பற்றி கூறிய ஒரு தவறான விஷயத்தால் உங்கள் துணை உங்கள் மேல் கோபமடையலாம். ஆனால் உங்கள் அன்பும் அரவணைப்பும் அவரை சமாதானப்படுத்திவிடும்.

அதிர்ஷ்ட எண்: 6

         6.கன்னி

ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்களை சுற்றி கற்றை போல காதலும் நிரம்பியிருக்கிறது. சுற்றி பாருங்கள் அனைத்தும் பிங்க் நிறத்தில். சிஸ்டம் ஒழுங்காக செயல்படாத நிலை இன்று ஏற்படலாம். அது உங்களது கற்பனையாக கூட இருக்க்கலாம் எனவே மின் சப்ளை மற்ற அத்யாவசிய விஷயங்களை சரி பார்த்த பின் நிபுணரை அழைக்கவும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. கடந்த சில நாட்களாக சோதனைகளை சந்தித்த நீங்கள் உங்கள் வாழ்கை துணையின் அன்பில் சொர்கத்தை அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

           7.துலாம்

திறந்து வைத்திருக்கும் உணவை சாப்பிடாதீர்கள், அது நோயை வரவழைக்கலாம். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது - ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும். உங்கள் அன்புக்குரியவரை ஆனந்தப்படுத்துவது கஷ்டமாக இருக்கும். உங்களிடம் சொல்லப்படும் அலோசனைகளும் உங்களை பற்றி கூறப்படும் கருத்துக்களும் உங்கள் மூடை பாதிக்கக்கூடும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று உங்கள் உறவு உங்கள் துணை மன ரீதியாக காயப்பட்டிருப்பதால் பாதிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 7

           8.விருச்சிகம்

சில டென்சன்களும் கருத்து வேறுபாடுகளும் வெறுப்பையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் காதலில் இன்று உங்களின் முடிவெடுக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். இன்று, உங்கள் பாஸ் ஏன் உங்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறார் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து அதனால் மகிழ்ச்சி கொள்வீர்கள். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். இன்று, திருமண பந்த்த்தின் அருமையை பல விதத்திலும் உணருவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

        9.தனுசு

மன அமைதிக்காக டென்களை தீர்த்திடுங்கள். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். நாளின் பிற்பகுதியில் ரிலாக்ஸ் பண்ணுங்கள். இன்று நீங்கள்தான் கவனிக்கப்படுவீர்கள் - வெற்றி உங்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 3

              10.மகரம்

தேவையில்லாத சிந்தனைகள் மனதில் நிரம்பியிருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் வேலையில்லாதிருக்கும் மூளைதான் பிசாசின் வேலையிடமாக இருக்கிறது. முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். பெயரளவில் தெரிந்தவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். நிலுவையில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால் - இன்று ஓய்வெடுக்க சிறிது நேரம்தான் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். ஒரு வெளி நபர் உங்கள் இருவருக்கும் நடுவில் சண்டை மூட்டிவிட முயற்சி செய்வார். ஆனல்ல் நீங்கள் அதற்க்கு இடம் கொடுக்க மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

           11.கும்பம்

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். உங்கள் பணத்தைக் கையாள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள் அல்லது நீங்கள் உங்கள் சீக்கிரத்திலேயே பட்ஜெட்டை தாண்டிவிடுவீர்கள். ரொமாண்டிக் சிந்தனைகள் மற்றும் கடந்தகால கனவுகளில் திளைக்கப் போகிறீர்கள். பகல் கனவு உங்களுக்கு பின்னடைவைத் தரும் - மற்றவர்கள் உங்கள் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்..

அதிர்ஷ்ட எண்: 1

                12.மீனம்

குழந்தைகளுடன் விளையாடுவது அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். உங்கள் அன்புக்குரியவருடன் பிக்னிக் சென்று மதிப்புமிக்க நினைவுகளை மறுபடி கொண்டு வாருங்கள். வங்கித் துறை அதிகரிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பலருக்கு பதவி உயர்வு வாய்ப்புகள் கிடைக்கும். ஆனந்தத்தை இரட்டிப்பாக்க சக அலுவலர்களிடம் அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உங்கள் துணை இன்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.

அதிர்ஷ்ட எண்: 9
 




Recommended For You