PUBLIC NEWS TV- 9/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 9/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:09-Nov-2017

 இன்றைய   ராசிபலன்கள்
                    09-11-2017
           வியாழக்கிழமை

             1.மேஷம்

உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை காண நீங்கள் ரிலாக்ஸ் பண்ண முயற்சிக்க வேண்டும். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். தொழில் விஷயத்தில் ஒரு நண்பரின் மதிப்புமிக்க ஆதரவு உதவியாக இருக்கும். உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள். உங்கள் துணைவருடன் மன அழுத்தம் மிக்க உறவு ஏற்படும். நீண்டகாலம் நீடிக்கும் அளவுக்கு கருத்து வேறுபாடு ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்: 1

            2.ரிஷபம்

உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உங்கள் புதிய திட்டங்கள் மற்றும் பிளான்கள் குறித்து பெற்றோரின் நம்பிக்கையையும் பெறுவதற்கு இது நல்ல காலம். இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் மண வாழ்வில் இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.

அதிர்ஷ்ட எண்: 9

               3.மிதுனம்

விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எல்லோரையும் நல்ல மன நிலைக்கு மாற்றும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். இன்று கடினமான நாள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. உங்கள் வாழ்க்கை துணை அதனை இன்று உறுதிப்படுத்துவார்.

அதிர்ஷ்ட எண்: 7

            4.கடகம்

கண்புரை நோய் உள்ளவர்கள் மாசுபட்ட பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் புகை உங்கள் கண்களை மேலும் பாதிக்கலாம். முடியுமானால் சூரிய வெளிச்சத்தில் அதிகம் செல்வதைத் தவிர்த்திடுங்கள். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். இன்றைக்கு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் மீதுதான் கவனம் தேவை உங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். புதிய முயற்சியை தொடங்கும் சிந்தனையில் இருந்தால் - விரைவாக முடிவெடுங்கள் - நட்சத்திரங்கள் சாதகமாக இருக்கின்றன - உங்கள் தேவைகள் பற்றி பயப்பட வேண்டாம். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். நீங்கள் நினைத்த்து போல இன்று நடக்காது ஆனால் இறுதியாக உங்கள் துணையுடன் அழகான பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2

             5.சிம்மம்

இன்று உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள் - உடல் சக்தி குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. நிச்சயமாக உங்களுக்கு சிறிது ஓய்வு தேவை. இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை தரலாம். சிறிது மருத்துவ கவனம் தேவைப்படும். சிறிய வேறுபாடுகள் எழலாம் என்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம். சில மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள் உங்கள் துணையுடனான மன ரீதியான பந்தம் இன்று பாதிக்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 9

              6.கன்னி

நீண்டகாலமாக உள்ள நோயில் இருந்து விடுபடுவீர்கள். ஆனால் சுயநலமான, முன்கோபியானவரை தவிர்த்திடுங்கள். அவர் உங்களுக்கு டென்சனை ஏற்படுத்தலாம். அது பிரச்சினையை பெரிதாக்கலாம். பணம் தொடர்பாக நிச்சயமற்ற நிலை உங்கள மனதில் டென்சனை ஏற்படுத்தும். பிரச்சினைகளை மனதைவிட்டு தள்ளி வைத்து, வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். காதலருடன் வெளியில் செல்லும் திட்டம் ரத்தாகும் என்பதால் ஏமாற்றம் ஏற்படும். சக பெண் அலுவலர்கள் அதிக ஆதரவாக இருந்து நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் உதவியாக இருப்பார்கள். இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் - நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் மிக ஆறுதலான நாள்.

அதிர்ஷ்ட எண்: 7

          7.துலாம்

குழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்பட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல - எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். வேலைகளை முடிக்க நீங்கள் முயற்சி செய்வதால் மனநிலை மற்றும் திட்டங்களில் மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். நேர்மையானவராகவும், அுகுமுறையில் உறுதியாகவும் இருங்கள். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். இன்று உங்கள் வாழ்க்கை தணைவர்/துணைவி தன் இன்னொரு பக்கமான தேவதை முகத்தை காண்பிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 1

          8.விருச்சிகம்

உங்களின் வேகமான செயல்பாட்டால் உத்வேகம் அதிகரிக்கும். வெற்றி பெறுவதற்கு- நேரத்துக்கு ஏற்ப ஐடியாக்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையை இது விசாலமாக்கும் - உங்கள் செயல்பாடு விரிவடையும் - உங்களின் பர்சனாலிட்டி மேம்படும், அறிவு வளரும். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். நண்பர்கள் உடனிருப்பது சவுகரியத்தை ஏற்படுத்தும். சிறிய பிரச்சினைக்கு கூட உங்கள் டார்லிங்குடன் உறவில் பிரச்சினை எழக்கூடும். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். அதிக செலவு உங்கள் இருவருக்கும் இடையில் சண்டையை ஏற்படுத்தலாம்.

அதிர்ஷ்ட எண்: 3

        9.தனுசு

சிக்கலான சூழ்நிலையில் அப்செட் ாக வேண்டாம். சாப்பாட்டின் சுவையை அறிய உப்பு தேவைப்படுவதைப் போல, மகிழ்ச்சியின் மதிப்பை அறிய மகிழ்ச்சியின்மையும் அவசியம். உங்கள் மனநிலையை மாற்ற சில நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். இன்றைக்கு எல்லோருமே உங்களுக்கு நண்பராக இருக்க விரும்புவார்கள் - அதை ஏற்பதில் நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் கண்ணீரை விசேஷமான நண்பர் துடைப்பார். நீங்கள் செய்த ஒரு நற் செயலால் இதுவரை உங்கள் எதிரியாய் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுவார்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் வாழ்க்கை துணை இன்று அற்புதமாக வேறு என்றுமே இருந்த்தில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்: 9

            10.மகரம்

ஆரோக்கியப் பிரச்சினைகள் வரலாம்- எனவே ரெகுலராக உடற்பயிற்சி செய்யவும். வருமுன் காப்பதே நல்ல தீர்வு என்பதை நம்புங்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் - எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். இன்று பேரின்பம் இன்று நீங்கள் செழுமையான காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். ஒரு இழப்பு உங்க திருமண வாழ்வை இன்று பாதிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 9

            11.கும்பம்

உங்கள் வெறுப்பைக் கொல்வதற்கு நல்லிணக்கமான இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அன்பைவிட அதிக சக்திவாய்ந்தது, உடலை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். பேரக் குழந்தைகள் மிகுந்த ஆனந்தத்துக்கு காரணமாக இருப்பார்கள். உங்கள் அன்புக்குரியவருக்கானது தொழில் விஷயத்தில் ஒரு நண்பரின் மதிப்புமிக்க ஆதரவு உதவியாக இருக்கும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும்.

அதிர்ஷ்ட எண்: 6

        12.மீனம்

மன அழுத்தம் அல்லது டென்சன் உங்களின் மன அமைதியைக் கெடுக்கலாம். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். உரிய காலத்தில் நீங்கள் செய்யும் உதவியால் ஒருவரை துரதிருஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவீர்கள். புதிய காதல் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அந்தரங்கமான, ரகசியமான தகவல்களை வெளிப்படுத்தாதீர்கள். தொழில் ரீதியாக வேலையில் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். இன்று, உங்கள் வாழ்க்கை துணைவர்/துணைவி உங்களை பற்றி அவர் நினைக்கும் அத்தனை விஷயங்களையும் பழைய விஷயங்களையும் ஆனந்தமாக நினைவு கூர்வார்.

அதிர்ஷ்ட எண்: 4

 




Recommended For You