PUBLIC NEWS TV-11/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV-11/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:11-Nov-2017

இன்றைய ராசிபலன்கள்
                   11-11-2017
           சனிக்கிழமை

 

             1-மேஷம்

மாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். உங்கள் டார்லிங்கின் மன நிலை இன்று ஊசலாட்டத்திலேயே இருக்கும். உங்களது நல்ல நன்பர் ஒருவர் இன்று உங்களை கோபமூட்டும் வகையில் நடக்க கூடும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் திருமண வாழ்க்கை தனது இருண்ட பக்கத்தை இன்று உங்களுக்கு காண்பிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1
 

            2-ரிஷபம்

அளவுக்கு அதிகமான கவலை மன அழுத்தம், ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் - அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது உங்கள் கருத்துகளைத் திணிக்காதீர்கள். அது உங்கள் நலனுக்கு நல்லதாக இருக்காது. தேவையில்லாமல் அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்துவீர்கள். இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும். உங்கள் காதல் வாழ்வும்தான். பிசினஸ் பார்ட்னர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க நீங்கள் ஒன்றாக உழைத்திடுங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணையின் உடல் பாதிப்பு இன்று உங்களை கவலையில் ஆழ்த்தும்..

அதிர்ஷ்ட எண்: 1
 

            3-மிதுனம்

உடல்நலம் குறித்த பிரச்சினைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். தேவையில்லாமல் மற்றவர்களிடம் குறை காணும் போக்கை உறவினர்கள் குற்றம் சொல்வார்கள். அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நீங்கள் உணர்ந்திட வேண்டும். இதனால் உங்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. குணத்தை மாற்றிக் கொள்வது நல்லது. தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். முக்கியமான பைல்களை எல்லா வகையிலும் முழுமையாக முடித்துவிட்டதாக உறுதியாக தெரிந்தால் தவிர, பாஸிடம் ஒப்படைக்காதீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். ஷாப்பிங் செல்லும்போது உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 8
 

          4-கடகம்

அழுத்தத்தை விரட்டிட குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளின் குணமாக்கும் சக்தியை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவர்கள்தான் பூமியில் அதிக சக்திவாய்ந்த ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமானவர்கள். புத்துணர்வு பெற்றதை நீங்களே உணர்வீர்கள். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் - முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். குடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. ஆபீசில் நிகழும் ஒரு ப்ரச்சினையில் னீங்கள் மூட் அவுட் ஆக கூடும் இன்று. பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. இன்று உங்கள் துணையுடன் இன்பமாக கழிக்கும் சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட எண்: 2
 

            5-சிம்மம்

அசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். ஆனால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு நண்பர் மிகவும் உதவியாக இருப்பார். டென்சனில் இருந்து விடுபட இனிமையான இசையைக் கேளுங்கள். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது. காதல் வேதனைகள் இன்று உங்களை தூங்க விடாது. உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது, முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்கள் அண்டை வீட்டுகார்ர்களுங்கள் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால் உங்கள் பந்தத்தை அசைக்க முடியாது.

அதிர்ஷ்ட எண்: 1
 

           6-கன்னி

உங்கள் பயத்தைப் போக்கியாக வேண்டிய நேரம் இது. அது உடல் இயக்கத்தை குறைக்கிறது என்பது மட்டுமின்றி ஆயுளையும் குறைக்கிறது என்பதை உணர வேண்டும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் - எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். வீட்டில் ஏதும் மாற்றங்கள் செய்வதற்கு முன் பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். இல்லாவிட்டால் அது கோபத்தை வரவழைத்து மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்திவிடும். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் அமைதியாக இருக்கவும். தேர்வு பயம் உங்களை பதற்றமாக்கிவிடக் கூடாது. உங்களின் முயற்சிக்கு நிச்சயமாக பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று, உங்கள் துணை இந்த உலகிலே சிறந்தவர் நாம் தான் என்ற உணர்வை உங்களுக்கு கொடுக்கும்

அதிர்ஷ்ட எண்: 8
 

           7-துலாம்

மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமானது. ஆனால் அதிகம் சாப்பிட்டால் மறுநாள் காலை வயிற்றுக் கோளாறு வரும் என்பதில் கவனமாக இருக்கவும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். மத இடம் செல்வது அல்லது துறவி ஒருவரை சந்திப்பது உங்களுக்கு ஆறுதலையும் மன அமைதியையும் கொடுக்கும். எதிர்பாராத ரொமாண்டிக் எண்ணங்கள். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் சகாக்களிடம் இருந்து குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று நீங்கள் இது வரை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் உங்கள் துணையின் அன்பில் மறப்பீர்கள்., .

அதிர்ஷ்ட எண்: 1
 

           8-விருச்சிகம்

அழுத்தம் மற்றும் பதற்றத்தை தவிர்த்திடுங்கள். அவை உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்ட வேண்டும். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இன்று ஆபீசில் புத்துணர்சியுடன் செயல்படுவீர்கள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். இன்று உங்கள் துணையுடன் ஆத்மார்த்தமாக அளவளாவி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3
 

           9-தனுசு

இன்பச் சுற்றுலாக்களும் சமூக நிகழ்ச்சிகளும் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து மகிழ்விக்கும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உறவினர்கள் எதிர்பாராத பரிசுகள் கொண்டு வருவர். ஆனால் உங்களிடம் ஏதாவதுஉதவியை எதிர்பார்ப்பார்கள். ரொமான்ஸ் பாதிக்கும். உங்களின் மதிப்புமிக்க பரிசுகள் / அன்பளிப்புகளாலும் இன்று எந்த மேஜிக்கும் செய்ய முடியாது. வேலை செய்யும் இடத்தில் சீனியர்கள் மற்றும் சகாக்களின் ஆதரவு உங்கள் நன்னெறியை அதிகரிக்கும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்களுக்கு இன்று உங்கள் துணை போதுமான கவனத்தை உங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்காத்தால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்: 9
 

            10-மகரம்

மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். உங்கள் நடத்தையில் கோளாறாக இருக்காதீர்கள் - குறிப்பாக உங்களின் துணைவருடன் - இல்லாவிட்டால் அது வீட்டில் அமைதியைக் கெடுத்துவிடும். காதலருடன் வெளியில் செல்லும் திட்டம் ரத்தாகும் என்பதால் ஏமாற்றம் ஏற்படும். வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். சூடான வாக்குவாததுக்கு பிறகு, இணக்கமாகி உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9
 

           11-கும்பம்

திறந்து வைத்திருக்கும் உணவை சாப்பிடாதீர்கள், அது நோயை வரவழைக்கலாம். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இணக்கத்தை ஏற்படுத்த நெருக்கமான ஒத்துழைப்பாக செயல்படுங்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். பின்னர் வருந்தக்கூடிய வகையில், பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாதீர்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். உங்கள் துணையுடனான உங்கள் மன ரீதியான பிணைப்பு குறித்து உங்களுக்கு சந்தேகம் தோன்றும். ஆனால் அது நிஜமல்ல.

அதிர்ஷ்ட எண்: 7
 

              12-மீனம்

இன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். பணத்தைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்பதுதான் இன்றைய வார்த்தைகளாக இருக்கிறது. வேலைகளை முடிக்க நீங்கள் முயற்சி செய்வதால் மனநிலை மற்றும் திட்டங்களில் மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும். இன்று காதலை சொல்வது எதிர்மறையாகிவிடும் என்பதால், தோல்விகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பயணம் உங்கள் பிசினஸ் தொடர்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணையை நீங்கள் இன்று தவறாக நினைக்க கூடும் இதனால் நீங்கள் அப்செட்டாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
 




Recommended For You