PUBLIC NEWS TV- 12/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 12/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:12-Nov-2017

இன்றைய   ராசிபலன்கள்
                   12-11-2017
        ஞாயிற்றுக்கிழமை

 

          1-மேஷம்

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். தினசரி வேலை அட்டவணையில் இருந்து விடுபட்டு நண்பர்களுடன் இன்று வெளியில் செல்லுங்கள். நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. ஒருவரை பற்றி மற்றவர் உல்ளத்தில் உள்ள அனைத்து விஷயங்களை இன்று உரையாடி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6
 

              2-ரிஷபம்

ஓய்வில்லாத தன்மை உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தலாம். கொஞ்ச தூரம் நடந்து சென்று சுத்தமான காற்றை சுவாசித்து இதைப் போக்கிடுங்கள். உங்களின் பாசிடிவான சிந்தனை உங்களுக்கு அதிகமாக உதவி செய்யும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்ய வைத்து இனிய மன நிலையில் வைக்கும். உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். இன்று, திருமண வாழ்வின் மோசமான பக்கத்தை காண நேரிடும்.

அதிர்ஷ்ட எண்: 5
 

             3-மிதுனம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க தயக்கம் வேண்டாம். நம்பிக்கை குறைவு உங்களை பாதித்துவிடக் கூடாது. அது பிரச்சினையை சிக்கலாக்கத்தான் உதவும். உங்கள் முன்னேற்ற வேகத்தை அது குறைக்கும். உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெற உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள். பிரச்சினையை சமாளிக்க கனிவாக புன்னகை செய்யுங்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். உங்கள் திருமண வாழ்க்கையிலேயே மிக சிறந்த நாளாக இன்று அமையும்.

அதிர்ஷ்ட எண்: 4
 

           4-கடகம்

வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், வாழ்வில் அக்கறை காட்டுவதே உண்மையான சவால் என உணருங்கள். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும் - முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். உங்கள் அழகிய செயலையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தினால் மற்றவர்களிடம் உங்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். ஒருவருடைய தலையீடு காரணமாக உங்கள் மனதிற்கினியவருடன் உறவு பாதிக்கப்படலாம். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். உங்கள் அண்டை வீட்டார் உங்களை பற்றி உறவினர்களிடம் தவறாக கூறக்கூடும்..

அதிர்ஷ்ட எண்: 7
 

         5-சிம்மம்

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனைவியை நச்சரிப்பதை தவிர்த்திடுங்கள். நச்சரிப்பது நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்பற்ற கருத்துகளுக்கும் இடமளிக்கும் - அது இருவரையும் தேவையில்லாமல் உமர்வுபூர்வமாக காயப்படுத்தும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் கவலை மற்றும் வருத்தத்தை தரும் இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது. செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். இன்று பொறுமயை கடைபிடிக்கவில்லையென்றால் உங்கள் திருமண வாழ்வில் ஒரு தரை இழைத்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
 

            6-கன்னி

ஆரோக்கியம் கருதி அதிக சப்தம் போடாதிருங்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். குடும்பத்தினர் தரும் நல்ல அறிவுரை இன்று உங்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் துணையின் பேச்சால் இன்று கோபமடைய கூடும். ஆனால் உங்கள் துணைவர்/துணைவி அதனை தன் அன்பால் சரி செய்து விடுவார்.

அதிர்ஷ்ட எண்: 4

         7-துலாம்

உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் - உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய - ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது? தந்தை கடுமையாக நடந்து கொள்வதால் மன உளைச்சல் ஏற்படலாம். ஆனால் நிலைமையை கட்டுப்பாட்டில் வைக்க நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். இதனால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். உங்களுடைய டார்லிங் பரிசுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று உங்கள் திருமண பந்தத்தின் இனிமயான நாள்.

அதிர்ஷ்ட எண்: 6
 

          8-விருச்சிகம்

நீங்கள் இன்று செய்யும் சில மாறுதல்கள் நிச்சயமாக உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் - அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.

அதிர்ஷ்ட எண்: 8
 

        9-தனுசு

சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். ரொமான்சுக்கு உற்சாகமான நாள் - மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள், அதை முடிந்தவரை ரொமாண்டிக்காக ஆக்கிட முயற்சி செய்யுங்கள். பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும் வரையில் முடியாதது எதுவுமே இல்லை. நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
 

           10-மகரம்

நிதானத்தை உரசிப் பார்ப்பதால் வாக்குவாதமும் மோதலும் ஏற்படும். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும் - எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். நீங்கள் சேர்ந்து வாழ்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பதில் கவனமாக இருக்கவும் - ஏதாவது மாறுபட்ட கருத்து இருந்தால் சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் பார்ட்னர் இல்லாத நேரத்தில், இருப்பை உணர்வீர்கள். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். இன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
 

          11-கும்பம்

குழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்பட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் தனிப்பட்ட அளவில் பிரச்சினைகள் ஏற்படுத்துவார்கள். காதலிலேயே எப்பொதும் மூழ்கியிருப்பவர்களுக்கு மட்டுமே காதலின் இசை கேட்கும். இன்று அந்த இசையை கேட்டு இந்த உலகில் உள்ள மற்ற எல்லா பாடல்களையும் மறந்துவிடுவீர்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்களுக்கும், துணைவருக்கும் இடையில் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது உங்கள் நீண்டகால உறவுக்கு நல்லதாக இருக்காது.

அதிர்ஷ்ட எண்: 3
 

       12-மீனம்

உடல் நலன் என்று வரும்போது உங்களை கவனிக்காமல் இருந்துவிடாதீர்கள். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்திருந்தால் பொழுதுபோக்கு மகிழ்வாக இருக்கும். அன்பான புன்னகையின் மூலம் உங்கள் காதலின் நாளை பிரகாசமாக்குங்கள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9
 




Recommended For You