PUBLIC NEWS TV- 16/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 16/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:16-Nov-2017

இன்றைய  12   ராசிபலன்கள்
                   16-11-2017
            வியாழக்கிழமை

 

               1-மேஷம்

மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும். உங்கள் காதல் வாழ்வும்தான். வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். உங்கள் துணையின் பேச்சால் இன்று கோபமடைய கூடும். ஆனால் உங்கள் துணைவர்/துணைவி அதனை தன் அன்பால் சரி செய்து விடுவார்.

அதிர்ஷ்ட எண்: 7
 

             2-ரிஷபம்

உங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். இன்று செய்யும் முதலீடு கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் பார்ட்னர்களிடம் இருந்து சில எதிர்ப்புகளைப் பெறுவீர்கள். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். இன்று, உங்கள் துணைக்கு நீங்கள் அந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை உணருவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
 

                3-மிதுனம்

உங்கள் விருப்பத்தின்படி குழந்தைகள் நடக்க மாட்டார்கள் - அது உங்களை ஆத்திரம் அடையச் செய்யலாம். கட்டுப்படுத்தாக கோபம் வழக்கமாக எல்லோரையும் காயப்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்த்திடுங்கள். கோபம் அடைபவரையும் அது பாதிக்கும். ஏனெனில் அது சக்தியை வீணடித்து நியாயத்தைக் கண்டுபிடிக்கும் தன்மையைக் குறைக்கும். அது பிரச்சினையை பெரிதாக்கத்தான் உதவும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. உங்களுடன் வாழ்பவர் உள்ளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார் - அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழக்கூடும். இன்று அபீசில் அனைவரும் உங்களிடம் இணக்கமாக அன்பாகவும் நடந்து கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் மிக ஆறுதலான நாள்.

அதிர்ஷ்ட எண்: 5
 

                    4-கடகம்

நீங்களாக மருந்து சாப்பிடாதீர்கள், மருந்தை சார்ந்திருக்கும் தன்மை அதிகரித்துவிடும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். உங்கள் அன்புக்குரியவரை ஆனந்தப்படுத்துவது கஷ்டமாக இருக்கும். செலவுமிக்க எந்த முயற்சியில் கையெழுத்திடுவதற்கு முன்பும் உங்கள் முடிவு செய்யும் திறனை பயன்படுத்துங்கள். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள். இன்று, நீங்கள் உங்கள் துணையுடன் ஏற்பட்ட சண்டையினால் திருமண வாழ்க்கை பலவீனமடைந்ததை போல உணரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 8
 

                5-சிம்மம்

இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் - எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது வெறுப்பை ஏற்படுத்தலாம். உங்கள் அன்புக்குரியவர் அல்லது துணைவரிடம் இருந்து வரும் ஒரு நல்ல தகவல் இன்றைய நாளின் நல்லெண்ணத்தை மேம்படுத்தும். மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள். ஆனால் நீங்கள் வேலை செய்வதாக இருந்தால் உங்கள் பிசினஸ் டீலிங்கில் கவனமாகப் பார்க்க வேண்டும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 7
 

                  6-கன்னி

உணர்ச்சிகளுக்கு ஆட்படும் இயல்பால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். கெட்ட பழக்கங்களால் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களிடம் இருந்து விலகியிருங்கள். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் இன்று காதலரை அது அப்செட் பண்ணாது. நிறைவேற்ற முடியும் என்ற உறுதி இருந்தால் தவிர வாக்குறுதி எதையும் தராதீர்கள். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். திருமண வாழ்க்கையில் சில பின் விளைவுகள் இருக்க கூடும். அதனை இன்று நீங்கள் சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
 

                   7-துலாம்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் இன்பச் சுற்றுலா உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம். இன்று உங்கள் வீட்டிலும், வீட்டைச் சுற்றியும் சில பெரிய மாற்றங்களை செய்வீர்கள். உங்கள் டார்லிங்குடன் சில கருத்து வேறுபாடு வரலாம் - உங்களின் நிலையை துணைவர் புரிந்து கொள்ளச் செய்வது கஷ்டமாக இருக்கலாம். நீங்கள் நேரடியாக பதில்கள் தராவிட்டால் உடன் பணிபுரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இன்று நீங்கள் ஷாப்பிங் சென்றால் உங்களுக்கு அருமையான ஒரு டிரஸ் தேர்வு செய்வீர்கள். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 7
 

               8-விருச்சிகம்

பிசியான வேலையிலும் உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்வில் அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான் சவால் என்பதை உணருங்கள். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் - முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள் - வெறுமனே பேசிவிட்டு ரிசல்ட் காட்டாதவர்களை மறந்துவிடுங்கள். சர்ப்ரைஸான ஒரு தகவல் உங்களுக்கு இனிய கனவைத் தரும். உங்கள் உடன் பணிபுரிபவர்கள் இன்று சிறிது மரியாதை குறைவுடன் நடந்து கொள்வது போல உங்களுக்கு தோன்றலாம். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்களுக்கு “காதல் பித்து” பிடிக்க வைக்கும் நாள் இதுவென்று கூறலாம்! காதலின் உச்சத்தை இன்று அடைவந்து இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று ரொமான்ஸ் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9
 

            9-தனுசு

இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். ஒரே இடத்தில் இருந்தாலும் காதல் உங்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து செல்லும் வலிமையுடையது. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் ட்ரிப் செல்வீர்கள். முக்கியமான பிசினஸ் முடிவுகள் எடுக்கும்போது பிறருடைய நெருக்குதலுக்கு பணியாதீர்கள். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். இன்று உங்கள் திருமண வாழ்வில் ஒரு அழகான திருப்பத்தை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6
 

                 10-மகரம்

ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள்தான் பிரதான நபராக இருப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் துணையுடன் சேர்ந்து ஒரு ஆர்வத்தை தூண்டும் விஷயத்தை செய்ய போகிறீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6
 

            11-கும்பம்

சாத்தியமில்லாத தேவையற்ற சிந்தனைகளில் சக்தியை வீணடிக்காதீர்கள், சரியான வழியில் அதை பயன்படுத்துங்கள். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். முதியவர்களிடம் உங்கள் லட்சியங்களை வெளிப்படுத்துங்கள், அவர்கள் முடிந்த வரை உதவி செய்ய முயற்சிப்பார்கள். காதலில் ஏற்படும் ஏமாற்றம் உங்கள் தைரியத்தை இழக்கச் செய்யாது. வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும்.

அதிர்ஷ்ட எண்: 4
 

              12-மீனம்

வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் - தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது - ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்கள் உடனிருப்பது சவுகரியத்தை ஏற்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் ரொம்ப பிகு பண்ணுவதால் இன்று உங்களுக்கு ரொமான்ஸ் சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். பயணம் - பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 1
 




Recommended For You