PUBLIC NEWS TV- 20/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 20/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:20-Nov-2017

இன்றைய 12   ராசிபலன்கள்
                20-11-2017
            திங்கட்கிழமை

 

                      1-மேஷம்

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். பனிக்கட்டியை போல வருந்தாதீர்கள், இன்று கவலைகள் உருகிவிடும். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள். அன்பான அணைப்புக்கு ஒரு மருத்துவ குணமும் உண்டு என உங்களுக்கு தெரியும்ல்லாவா. இன்று அதனை நீங்கள் அபரிமிதமாக பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8
 

               2-ரிஷபம்

உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் உறவில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது. ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. உங்கள் வாழ்க்கை துணை அதனை இன்று உறுதிப்படுத்துவார்.

அதிர்ஷ்ட எண்: 7
 

             3-மிதுனம்

மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஆக்கிரமிக்க இடம் தராதீர்கள். அமைதியாகவும் டென்சன் இல்லாமலும் இருக்க முயற்சி செய்யுங்கள். அது மன உறுதியை மேம்படுத்தும். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் - அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் இதயம் மற்றும் மனதில் ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். ஒருவரை பற்றி மற்றவர் உல்ளத்தில் உள்ள அனைத்து விஷயங்களை இன்று உரையாடி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
 

              4-கடகம்

உடல் நலன் என்று வரும்போது உங்களை கவனிக்காமல் இருந்துவிடாதீர்கள். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். உங்களின் வெளிப்படையில்லாத வாழ்க்கை துணைவரை டென்சனாக்கும். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்கள் துணையால் இன்று நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடும்.

அதிர்ஷ்ட எண்: 9
 

              5-சிம்மம்

உணர்ச்சிபூர்வமாக இந்த நாள் மிக நல்லதாக இருக்காது. நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். வேலையில் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். இன்று, உங்கள் துணை உங்களை பற்றியோ அல்லது திருமணம் பற்றியோ ஏதேனும் தறாக பேசிவிடக் கூடும்.

அதிர்ஷ்ட எண்: 7
 

               6-கன்னி

குழந்தைகளுடன் இருப்பதால் ஆறுதலாக உணருங்கள். குழந்தைகளின் நோய் தீர்க்கும் சக்தி உங்கள் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி மற்ற குழந்தைகளுக்கும் உண்டு. அவர்கள் உங்கள் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்துவார்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். சமூக வாழ்வை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பிசியான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி வெளியே குடும்பத்தினருடன் சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பிரஸரை அது குறைப்பது மட்டுமின்றி தயக்கத்தையும் போக்கும். சில தவறான புரிதல் காரணமாக காதலருடனான உறவு இன்று பாதிக்கப்படலாம். காதல் என்பது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் இதயங்களைக் கவர்வீர்கள். உங்கள் துணைக்கு உங்கள் மேல் சந்தேகம் வரக்கூடும். இதனால் நீங்கள் வருத்தமடையலாம்.

அதிர்ஷ்ட எண்: 5
 

                   7-துலாம்

இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள் - நீங்கள் எதைச் செய்தாலும் - வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். இன்று, உங்கள் துணைக்கு நீங்கள் அந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை உணருவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8
 

                8-விருச்சிகம்

இன்று உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நம்பிக்கையையும் எண்ணத்தையும் ஊக்குவிப்பார்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அமைதியை காப்பாற்றவும், வீட்டில் குடும்பத்தினரிடம் இணக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் கோபத்தை நீங்கள் வென்றாக வேண்டும். ரொமான்ஸ் - வெளியில் செல்லுதல் மற்ரும் பார்ட்டிகள் உற்சாகமாக அமையும் ஆனால் மிகுந்த களைப்பை ஏற்படுத்தும். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு, எனவே ஆபீசில் நிதானத்துடன் செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 1
 

           9-தனுசு

அழுத்தம் காரணமாக சிறிது நோய் ஏற்படலாம். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். உங்கள் உதவி தேவைப்படும் நண்பர்களை போய்ப் பாருங்கள். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து பரிசு / அன்பளிப்பு பெறுவதால் உற்சாகமான நாள். தொடர்புகொள்ளும் நுட்பத்துக்கும், வேலைத் திறனுக்கும் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார்.

அதிர்ஷ்ட எண்: 7
 

                10-மகரம்

சட்ட விஷயங்களால் சில டென்சன்கள் வரும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது - பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உறவினர்கள் / நண்பர்கள் வந்து மாலை நேரத்தை அற்புதமானதாக ஆக்குவார்கள். இன்று காதல் எண்ணத்தை பரப்புவீர்கள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
 

           11-கும்பம்

போதும் என்ற வாழ்வுக்கு மனதின் உறுதியை மேம்படுத்துங்கள். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் - பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். சிலருக்கு - குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். இன்றைக்கு காதலரை ஏமாற்றாதீர்கள் - பின்னர் வருத்தப்பட நேரிடும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். இன்று அதிகமாக உண்ட்தலோ அல்லது குடித்த்தாலோ உங்களின் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 4
 

            12-மீனம்

புகையிலை பழக்கத்தை ஒழிக்க சரியான நேரம் இது. இல்லாவிட்டால் பிற்காலத்தில் அதைக் கைவிடுவது மிகவும் கஷ்டமாகிவிடும். அது உடல் நலனுக்கு விரோதியாக இருப்பதுடன் மூளை செயல்பாட்டையும் பாதிக்கும். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் சந்ததிக்காக திட்டமிட அருமையான நாள் தனிப்பட்ட விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். இன்று உங்கள் துணையின் மேல் இன்னும் அதிகமாக காதல் வசப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2
 




Recommended For You