PUBLIC NEWS TV- இன்றைய 12 ராசிபலன் படியுங்கள்.

PUBLIC NEWS TV- இன்றைய 12 ராசிபலன் படியுங்கள்.

PUBLISHED:23-Nov-2017

               இன்றைய 12 ராசிபலன்
                     23-11-2017
                       வியாழக்கிழமை 

 

               1-மேஷம்

ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். காதலுக்கு உரியவர்களுடன் வாக்குவாதத்தை ஏற்படுத்தக் கூடிய சர்ச்சையான விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு சுமையற்றதைப் போல கருத்தை முன்வைப்பதில் திளைத்துப் போவீர்கள். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இன்று உங்கள் துணை நல்ல மூடில் உள்ளார். அதனால் நீங்கள் ஒரு சர்ப்ரைசை இன்று எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 6
 

                  2-ரிஷபம்

இன்று அமைதியாக - டென்சன் இல்லாமல் இருங்கள். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். பழைய நண்பர் ஒருவர் எதிர்பாராமல் வருகை தந்து, பழைய மகிழ்வான நினைவுகளை புதுப்பிப்பார். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். வேலையில் கவனம் செலுத்தி, உணர்ச்சிகரமான மோதல்களில் இருந்து தள்ளியே இருங்கள். 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 5
 

                   3-மிதுனம்

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் பிள்ளைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் கனவுகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு நீங்கள் ஊக்கம் தர வேண்டும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும். நேர்மையானவராகவும், அுகுமுறையில் உறுதியாகவும் இருங்கள். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இன்று, இவ்வளவு அற்புதமான துணையை பெற்றது பற்றி நீங்கள் பெருமை கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3
 

             4-கடகம்

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுங்கள். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் - அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். நண்பர்களுடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். ஆனால் வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனமாக இருங்கள். தனிப்பட்ட உறவுகள் சென்சிடிவானவை மற்றும் முக்கியமானவை உங்கள் குடும்பத்தின் உதவியால் தான் வேலையில் உங்களால் சிறப்பாக செயல் பட முடிகிறதென்று நீங்கள் உணர்வீர்கள். உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள். உங்கள் துணையின் கடுமையான பக்கத்தை இன்று நீங்கள் கண்டு அதனால் வேதனை படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 7
 

           5-சிம்மம்

உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். தொடர்ந்து நச்சரிப்பதால் குழந்தையின் நடத்தை பாதிக்கும். குழந்தையை காப்பாற்ற நீங்கள் தள்ளி இருப்பதுதான் இப்போதைய தேவையாகும். அன்புக்குரியவரிடம் காதலைப் உணரச் செய்து பகிர்ந்து கொள்ள வேண்டும். முக்கியமான பைல்களை எல்லா வகையிலும் முழுமையாக முடித்துவிட்டதாக உறுதியாக தெரிந்தால் தவிர, பாஸிடம் ஒப்படைக்காதீர்கள். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். விட்டுக்கொடுத்து வாழவது தான் திருமண வாழ்க்கை என நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியென்றால் திருமணம் தான் உங்கள் வாழ்வில் நடந்து மிக இனிமையான சம்பவம் என்றும் நீங்கள் இன்று அறிவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
 

                    6-கன்னி

தகராறு பிடித்தவரிடம் வாக்குவாதம் செய்வது உங்கள் மன நிலையை பாதிக்கும். புத்திசாலித்தனமாக இருங்கள். முடிந்தால் அதைத் தவிர்த்திடுங்கள். ஏனென்றால் பகைமையும் படபடப்பும் ஒருபோதும் உங்களுக்கு உதவாது. ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். மொத்த குடும்பத்துக்கும் வளம் சேர்க்கும் பிராஜெக்ட்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் நீங்கள் இதுவரை செய்ய விரும்பிய வேலை இன்று ஆபீசில் உங்களை தேடி வரும். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உறவினரால் உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 4
 

                  7-துலாம்

உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். இடைவிடாத வேலை நிறைந்த நாளிலும் சக்தியை சேர்த்துக் கொள்ள உங்களால் முடியும். பணம் தொடர்பாக நிச்சயமற்ற நிலை உங்கள மனதில் டென்சனை ஏற்படுத்தும். பேரக் குழந்தைகள் மிகுந்த ஆனந்தத்துக்கு காரணமாக இருப்பார்கள். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். ஆதிக்கம் செலுத்தும் நபர்களுடன் இருக்கும்போது உங்கள் தொழிலில் பெரிய நல்ல மாற்றங்களை செய்வீர்கள். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். னீங்கள் இன்று த்ட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே பயக்கும்.

அதிர்ஷ்ட எண்: 6
 

                  8-விருச்சிகம்

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்தால் பலன் கிடைக்கக் கூடிய நாள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்த இரண்டையும் சமமாக பாவித்திடுங்கள். சிறிய வேறுபாடுகள் எழலாம் என்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எனர்ஜி இன்று ஆபீசில் உங்களுக்கு உதவாது. எனவே மன உறுதி அவசியம். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று உங்கள் திருமண வாழ்க்கை ஒரு கடினமான அத்தியாயத்தை சந்திக்கக் கூடும்.

அதிர்ஷ்ட எண்: 8
 

                     9-தனுசு

இன்று உங்களை எரிச்சலடையச் செய்யும், அசவுகரியமாக்கும் வகையில் பல டென்சன்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். உங்கள் நீண்ட நாள் ஆசையை உங்கள் துணை இன்று சர்ப்ரைசாக நிறைவேற்றுவார். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது.

அதிர்ஷ்ட எண்: 5
 

                       10-மகரம்

புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் - ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். கடல் கடந்த உறவினரிடம் இருந்து வரும் பரிசு உங்களை மகிழ்விக்கும். காதல் மன நிலையில் இருப்பீர்கள் - எனவே உங்களுக்கும் காதலகுக்கும் ஸ்பெஷல் பிளான் எதையாவது செய்யுங்கள். உங்கள் வேலை சூழலில் இன்று ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணை இது போல அற்புதமாக இது வரை இருந்ததில்லை. உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து நீங்கள் இன்று ஒரு இனிய சர்ப்ரைசை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 5
 

                11-கும்பம்

வெறுப்பு உணர்ச்சி உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்துவிடாதீர்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். சகோதரிக்கு திருமண ஏற்பாடு செய்தி மகிழ்ச்சி தரும். அவரைவிட்டுப் பிரிவதால் நீங்கள் சோகமாக உணரலாம். ஆனால் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல், நிகழ்காலத்தை அனுபவிக்க வேண்டும். ரொமான்ஸ் வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் உறவில் பாதிப்பு வரலாம். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 3
 

                12-மீனம்

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள் - தவறாகிவிடாது என்று நிச்சயமாக தெரிந்தால் தவிர உங்கள் ஐடியாக்களை முன்வைக்காதீர்கள். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள் - சிலர் செஸ், குறுக்கெழுத்து விளையாடுவீர்கள்.- மற்றவர்கள் கதை- கவிதை எழுதுவீர்கள் அல்லது எதிர்கால திட்டங்களை தயாரிப்பீர்கள். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் மிக ஆறுதலான நாள்.

அதிர்ஷ்ட எண்: 9
 




Recommended For You