PUBLIC NEWS TV- 25/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 25/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:25-Nov-2017

                 இன்றைய    12     ராசிபலன்கள்
                                     25-11-2017
                           சனிக்கிழமை

 

                    1=மேஷம்

அதிகம் ஸ்ட்ரெயின் செய்து கொள்வதைத் தவிர்த்திடுங்கள். அது அழுத்தத்தை அதிகரித்து களைப்படையச் செய்துவிடும். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் - அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். காதலுக்கு உரியவர் மகிழ்ச்சியாக இருப்பார். மாலை நேரத்தில் அவருக்காக நீங்கள் ஏதாவது திட்டமிட வேண்டும். உங்கள் உறவில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது. கஷ்டமான ஒரு வேலையை உங்களால் முடிக்க முடிந்ததால் நண்பர்கள் உங்களை பாராட்டு மழையில் நனைய வைப்பார்கள். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். மழைக்கும் ரொமான்ஸுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது போல உங்கள் வாழ்கை துணையின் அன்பு மழையில் இன்று நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2
 

                        2=ரிஷபம்

உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். நண்பர்களுடன் அதிக ஈடுபாடு காட்டி வீட்டில் அல்லது படிப்பில் அதிக கவனம் காட்டாத காரணத்தால் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம். அமைதியான தூய்மையான காதலை உணர்ந்திடுங்கள். இன்று வானம் மிக ப்ரகாசமாக தெரியும், பூக்கள் மேலும் வண்ணமயமாக தெரியும், உங்களை சுற்றியுள்ள அனைத்தும் பளபளப்பாக தோன்றும் ஏனெனில் நீங்கள் காதல் வசப்பட்டுவிட்டீர்கள்! வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார்.

அதிர்ஷ்ட எண்: 1
 

                 3=மிதுனம்

உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது - ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களில் சிலர் உங்களை நெருக்கமாக கவனித்து உங்களையே ரோல் மாடலாகவும் கருதுகிறார். உங்கள் நற்பெயரை அதிகரிக்கும் வகையில் பாராட்டத்தக்க செயல்களை மட்டுமே செய்யுங்கள். வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் திருமண வாழ்வை பாதித்துவிடும். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். மற்றவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வில் கடினமான நாள். அதனால் கவனம் தேவை. 

அதிர்ஷ்ட எண்: 8
 

                   4=கடகம்

குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலை வருத்திக் கொள்ளாதீர்கள். உரிய பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். தேவையான நேரத்தில் வேகமாக செயல்படுவதன் மூலம் பாராட்டு பெறுவீர்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். ஷாப்பிங் செல்லும்போது உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். 

அதிர்ஷ்ட எண்: 3
 

                     5=சிம்மம்

உணர்ச்சிக்கு ஆட்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். அது உங்கள் குழந்தையின் நலனை பாதிக்கலாம். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ரொமான்ஸில் பின்னடைவு இருக்கும். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் தூனயுடன் ஏற்படும் வாக்குவாதம் இன்று வேறு திசையை நோக்கி செல்லக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 1
 

                    6=கன்னி

ஓய்வு முக்கியமானதாக இருக்கும் நாள் - சமீப காலமாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இத அவசியம் - பொழுதுபோக்கும் மனமகிழ் நிகழ்வுகளும் நீங்கள் ரிலாக்ஸ் பண்ண உதவும். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். உங்கள் சீனியர்கள் நீங்கள் கூறும் கருத்தினை இன்று புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.. எனவே பொறுமயுடன் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யவும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 8
 

                    7=துலாம்

இன்றைக்கு ஆரோக்கியம் பூரணமாக இருக்காது. நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். இன்று பதற்றமாகவே வைத்திருக்கும். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எனர்ஜி இன்று ஆபீசில் உங்களுக்கு உதவாது. எனவே மன உறுதி அவசியம். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்களுக்கும், துணைவருக்கும் இடையில் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது உங்கள் நீண்டகால உறவுக்கு நல்லதாக இருக்காது.

அதிர்ஷ்ட எண்: 2
 

                    8=விருச்சிகம்

நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். வீட்டில் சில மாற்றங்கள், நேசத்துக்கு உரியவருடன் பிரச்சினைக்கு வழிவகுக்கும். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். பார்ட்னர்ஷிப்பில் புதிய முயற்சி தொடங்க நல்ல நாள். எல்லாமே பலன் தந்துவிடாது. ஆனால் பார்ட்னர்களுடன் கைகோர்ப்பதற்கு முன்பு சிந்திக்கவும். இன்று நீங்கள் ஒரு நட்சத்திரம் என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள் - ஆனால் பாராட்டக் கூடிய விஷயங்களுக்கு மட்டும். இன்று உங்கள் தேவைகளை உங்கள் துணை நிறைவேற்ற தவறலாம். அதனால் உங்கள் மூட் பாதிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 4
 

                    9=தனுசு

துறவு நிலையில் உள்ள ஒருவரின் தெய்வீக சிந்தனை உங்களுக்கு ஆறுதலையும் சவுகரியத்தையும் கொடுக்கும். அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். குழந்தைகளை சமாளிப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுவீர்கள். காதல் உணர்வான மகிழ்ச்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அபீசில் இன்று அனைத்து வேலையிலும் உங்கள் கை மேலோங்கியிருக்கும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். சில சமயம் உங்கள் உறவை காப்பாற்ற நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது. உங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். 

அதிர்ஷ்ட எண்: 1
 

               10-மகரம்

நாளை மகிழ்வாக வைத்துக் கொள்ள மன டென்சன், அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். உங்களை கீழே இழுத்துவிட முயற்சிக்கும் நபர்களைக் கையாள்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஒருதலைக் காதல் உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். நிறைய சாதிக்கும் திறமை உங்களுக்கு உள்ளது - எனவே உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் துணை இன்று சிறிது வித்யாசமாக நடந்து கொள்வார். அது உங்களை காயப்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 1
 

                11-கும்பம்

காற்றில் கோட்டை கட்டுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். அர்த்தமுள்ள எதையாவது செய்வதில் சக்தியை செலவிடுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. புதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். சோஷியல் மீடியாவில் திருமண வாழ்வு குறித்து ஏராளமான ஜோக்குகள் உள்ளன. ஆனாள் இன்று உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உங்களை தேடி ஒரு ஆச்சர்யமான தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்: 7
 

                  12-மீனம்

சில மனமகிழ் நிகழ்ச்சிக்காக சீக்கிரம் அலுவலகத்தைவிட்டு வெளியே செல்லுங்கள். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தரும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இன்று செய்யும் முதலீடு கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் பார்ட்னர்களிடம் இருந்து சில எதிர்ப்புகளைப் பெறுவீர்கள். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணை உங்களின் பலவீனம் பற்றி தெரிந்து நடந்து கொள்வார். அது உங்களை மகிழ்சியில் ஆழ்த்தும்.

அதிர்ஷ்ட எண்: 5
 




Recommended For You