PUBLIC NEWS TV- 30/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 30/11/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:30-Nov-2017


           இன்றைய 12   ராசிபலன்கள்
                    30-11-2017
                     வியாழக்கிழமை

 

               1-மேஷம்

புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நிதி மற்றும் வீட்டில் அசவுகரியத்தை ஏற்படுத்துவதில் வரம்பு மீறி செயல்படுவார். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும். இன்று, நீங்கள் இதுவரை ஆபீசில் உங்கள் எதிரியாக நினைத்த ஒருவர் உண்மையில் உங்கள் நலம் விரும்பி என்பதை தெரிந்து கொள்வீர்கள். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள்.

அதிர்ஷ்ட எண்: 5

               2-ரிஷபம்

உங்களுக்கு தூண்டுதல் தரும் உணர்வுகளை அடையாளம் காணுங்கள். பயம், சந்தேகம், கோபம், பேராசை போன்ற நெகடிவ் சிந்தனைகளை ஒழிக்க வேண்டும். அவை உங்கள் விருப்பங்களின் எதிர் சக்திகளை காந்தம் போல இழுப்பவை. நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். பழைய தொடர்புகளும் நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள். ஆனால் நீங்கள் வேலை செய்வதாக இருந்தால் உங்கள் பிசினஸ் டீலிங்கில் கவனமாகப் பார்க்க வேண்டும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் துணை தன்னுடைய இனிமையான இன்னொரு பக்கத்தை உங்களுக்கு காண்பிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 4
 

             3-மிதுனம்

மன அழுத்தத்திற்கு எதிரான மருந்தாக புன்னகை வேலை செய்யும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. மனதில் அழுத்தம் இருந்தால் - உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் பேசுங்கள் - அது உங்கள் தலையில் இருந்து பாரத்தை இறக்கிவிடும். ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2
 

           4-கடகம்

உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்க, பிடிவாத போக்கை கைவிடுங்கள். ஏனெனில் அது நேரத்தைதான் வீணடிக்கும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்கள் துணைவரின் குடும்பத்திருடைய தலையீடுகளால் உங்கலுடைய நாள் அப்செட்டாக இருக்கும். வேலையில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 6
 

               5-சிம்மம்

உங்களின் பொறுப்பற்ற கருத்துகளால் குடும்பத்தினரின் உணர்வுகலை நீங்கள் புண்படுத்தலாம். முடியுமானால் கருத்துகளை சொல்வதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு எதிராக அமைந்து, குடும்பத்தின் பெயருக்கு களங்கமாகிவிடக் கூடும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். வெளியாட்களின் தேவையற்ற தலையீடு காரணமாக துணைவருடனான உறவு பாதிக்கப்படலாம். தனிப்பட்ட வழிகாட்டுதல் உங்கள் உறவை மேம்படுத்தும். ஆபீசில், இன்று நீங்கள் கூறுவதை அனைவரும் மிக நல்ல முறையில் கேட்பார்கள். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4
 

               6-கன்னி

புகைப் பழக்கத்தை விட்டொழியுங்கள். அது உங்கள் உடலை திடமாக வைத்திடும். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். மற்றவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்குவதற்கு நல்ல நாள் காதலருடன் பழிவாங்கும் வகையில்நடந்து கொள்வதால் எந்தப் பலனும் கிடைக்காது - மாறாக நீங்கள் அமைதியாக இருந்து காதலர் மீதுள்ள உண்மையான உணர்வை விளக்க வேண்டும். உங்கள் வேலையில் திறமையை அதிகரிக்க புதிய டெக்னிக்குகள் பயன்படுத்துங்கள். உங்களை நெருக்கமாக கவனிப்பவர்கள், உங்களுடைய ஸ்டைல் மற்றும் தனிப்பட்ட செயல்முறையில் ஆர்வம் கொள்வார்கள். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். உங்கள் துணையின் உடல் நலம் இன்று பாதிப்படையலாம்.

அதிர்ஷ்ட எண்: 2
 

               7-துலாம்

உங்கள் டென்சனில் இருந்து விடுபடுவீர்கள். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இன்று உங்கள் துணையுடன் ஓய்வாக பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
 

               8-விருச்சிகம்

மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கு ஆன்மிகம்தான் சிறந்தது என்பதால் ஆன்மிக உதவியை நாட வேண்டிய நேரம் இது. தியானமும் யோகாவும் உங்கள் மன உறுதியை மேம்படுத்தும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் பட்டியலை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். உங்கள் பாஸ் இன்று மிக மோசமான மூடில் வரலாம் எனவே அதை நீங்கள் சமாளிப்பது கடினமாக இருக்கும். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் துணைக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டியது திருமண பந்த்த்தின் எழுதப்பாத விஷயமாகும் அதனை நீங்கள் நெடு நாட்களாக செய்ய தவறி விட்டீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
 

                  9-தனுசு

உங்கள் உணவில் முறையான அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரேன் தலைவலி நோயாளிகள் மதிய உணவை தவறவிடக் கூடாது. இல்லாவிட்டால் தேவையில்லாமல் உணர்ச்சிபூர்வ அழுத்தம் ஏற்படும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். பழைய நண்பர் ஒருவர் எதிர்பாராமல் வருகை தந்து, பழைய மகிழ்வான நினைவுகளை புதுப்பிப்பார். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். புதிய பிசினஸ் பார்ட்னர்சிப் பற்றி பரிசீலிப்பவராக இருந்தால் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்பு உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் தோற்றத்தை மேம்படுத்தக் கூடிய, வாய்ப்புள்ள பார்ட்னர்களை ஈர்க்கக் கூடிய வகையில் மாற்றங்களை செய்யுங்கள். திருமண வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, இன்று நீங்கள் என்றுமே நினைத்து மகிழும்படியான பொன்னான நாளாக அமையப்போகிறது.

அதிர்ஷ்ட எண்: 4
 

            10-மகரம்

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுங்கள். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் காதலிப்பவர் ரொமாண்டிக் மூடில் இருப்பார். இன்று நீங்களும் உங்கள் காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து காதலின் உச்சத்தை அடைவீர்கள். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். உங்களுக்குள் நிகந்த சிறு ஊடலை மறந்து உங்கள் வாழ்க்கை துணை அன்புடன் தழுவிக்கொள்வார்.

அதிர்ஷ்ட எண்: 4
 

              11-கும்பம்

அளவுக்கு மிஞ்சிய உற்சாகமும், பேரார்வமும் உங்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். இதைத் தவிர்க்க உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். இன்று நீங்கள் அறிவுரை கூறினால் - அறிவுரை பெறவும் தயாராக இருங்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். வேலையில் தொழில் செய்யும் போக்கு உங்களுக்கு பாராட்டை பெற்றுத் தரும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். தொடர்ச்சியான ஒப்புதல் இல்லாத நிலையால் பிரச்சினை ஏற்படும். உங்கள் துணைவருடன் ஒத்துப் போக ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1
 

                  12-மீனம்

இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். தபால் மூலம் வரும் ஒரு முக்கியமான தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே மகிழ்ச்சியைக் கொண்டு வரும். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் - அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். பிசினஸ் மீட்டிங்குகளில் அதிகம் பேசுபவராகவோ உணர்ச்சிவயப்படவோ செய்யாதீர்கள் - உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் நற்பெயரை சீக்கிரம் கெடுத்துக் கொள்ளக் கூடும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் ஒன்றாக அமர்ந்து பேசி அதனை தீர்க்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 8
 




Recommended For You