PUBLIC NEWS TV- 02/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 02/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:02-Dec-2017

   இன்றைய 12   ராசிபலன்
                  02-12-2017
                    சனிக்கிழமை


           1-மேஷம்

குடும்பத்திற்காக உங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்வீர்கள். ஆனால் அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்க வேண்டும். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். மூதாதையரின் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. நெடு நாட்களுக்கு பிறகு, உங்கள் துணையிடமிருந்து இன்று இதமான அணைப்பை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1
 

                2-ரிஷபம்

உடல் திறனை பராமரிக்க விளையாட்டில் சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். குடும்பம் சம்பந்தமான சில பிரச்சினைகள் குடும்பத்தில் அமைதி மற்றும் ஆரோக்கிய சூழ்நிலையைக் கெடுக்கும். உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளை இன்று புரிந்து கொள்ளுங்கள். சீனியர்களின் ஆதரவும் பாராட்டும் உங்கள் நன்னெறி மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். செக்ஸ் மட்டும் தான் திருமண வாழ்க்கை என சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9
 

                 3-மிதுனம்

பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம். குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் - குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. அலுவலக டென்சனை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். அது குடும்ப மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும். அலுவலகத்திலேயே அதை தீர்த்துவிட்டு, வீட்டில் குடும்ப வாழ்வை அனுபவிப்பது நல்லது. இன்று உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் மிகவும் வருந்துவீர்கள். புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் துணைக்கு உங்கள் மேல் சந்தேகம் வரக்கூடும். இதனால் நீங்கள் வருத்தமடையலாம்.

அதிர்ஷ்ட எண்: 7
 

              4-கடகம்

உங்கள் வெறுப்பைக் கொல்வதற்கு நல்லிணக்கமான இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அன்பைவிட அதிக சக்திவாய்ந்தது, உடலை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் - நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் - அது உங்களுக்கு நல்லதை செய்யும். இன்று ரொமான்ஸ் வாழ்வில் சிக்கல் நிறைந்திருக்கும். பிசினஸில் புதிய ஐடியாக்களுக்கு பாசிடிவாக சீக்கிரம் பதில் தெரிவியுங்கள். அவை உங்களுக்கு சாதகமாக அமையும். கடின உழைப்பால் அவற்றை நீங்கள் நிஜமாக்க வேண்டும் - அதுதான் உங்கள் பிசினஸ் நிலையை வெற்றி பெறச் செய்யும் சாவியாகும். வேலையில் ஆர்வத்தை மீட்டெடுக்க அமைதியை பின்பற்றுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.

அதிர்ஷ்ட எண்: 1
 

                5-சிம்மம்

முன்கோபத்தால் சில பிரச்சினை ஏற்படலாம். பணத்தைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்பதுதான் இன்றைய வார்த்தைகளாக இருக்கிறது. பக்கத்து வீட்டாருடன் வாய்த்தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். ஆனால் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் அது நிலைமை மேலும் மோசமாக்கும். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், உங்களுடன் யாருமே தகராறு செய்ய முடியாது. நல்லுறவு பராமரிக்க முயற்சி செய்யுங்கள். நீண்ட காலமாக தீராமல் உள்ள தகராறை இன்று தீர்த்திடுங்கள், நாளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். வாழ்வில் திரைக்குப் பின்னால் நிறைய செயல்படுவீர்கள். நீங்கள் உணர்வதைவிட அதிகமான மறைமுக செயல்பாடு இருக்கும். அடுத்த சில நாட்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9
 

               6-கன்னி

வலுவான எதிர்ப்பு மற்றும் அச்சமற்ற தன்மையால் மனதின் சக்தி அதிகரிக்கும். இந்த வேகம் தொடரட்டும். எந்த சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இது உதவும். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள் - யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் - அவ்ரகைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். இன்று ஆபீசில் நடக்கும் ஒரு ப்ரச்சினையில் தேவையில்லாமல் நீங்கள் தான் அதற்கு காரணம் என்பது போல மாட்டிக்கொள்ள கூடும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். அன்பான அணைப்புக்கு ஒரு மருத்துவ குணமும் உண்டு என உங்களுக்கு தெரியும்ல்லாவா. இன்று அதனை நீங்கள் அபரிமிதமாக பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
 

             7-துலாம்

உங்கள் பிள்ளை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியாவிட்டால் திட்டாதீர்கள். அடுத்த முறை நன்றாக எழுதுமாறு ஊக்கம் கொடுங்கள். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்கள் காதல் துணையில் மற்றொரு இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள். இன்று ஆபீசில் நாள் முழுக்க சிறிது மூட் அவுட்டாக இருப்பீர்கள். அதனால் உங்கள் வேலையின் தரம் பாதிப்படையலாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று உங்கள் துணையுடன் சேர்ந்து ஒரு ஆர்வத்தை தூண்டும் விஷயத்தை செய்ய போகிறீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1
 

                   8-விருச்சிகம்

வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது - உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப டென்சனை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவசியமில்லாமல் கவலைப்படுவது மன அழுத்தத்தை அதிகரிக்கும். முடிந்த வரையில் சீக்கிரமாக மற்றவர்களின் உதவியுடன் அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். அழுத்தத்தை எதிர்கொள்ள உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். பயணம் - பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு மூட் இல்லாவிட்டாலும் உங்கள் துணை வெளியே செல்ல கட்டாயப்படுத்த கூடும் இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 2
 

               9-தனுசு

விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். நண்பர்களுடன் அதிக ஈடுபாடு காட்டி வீட்டில் அல்லது படிப்பில் அதிக கவனம் காட்டாத காரணத்தால் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்று பேரின்பம் ஆபீசில் உங்கள் டீமில் அதிகம் வெறுப்பேற்றும் நபர் இன்று மிக இணக்கமாக உங்களிடம் நடந்து கொள்வார். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். இன்று, நீங்கள் உங்கள் துணையுடன் ஏற்பட்ட சண்டையினால் திருமண வாழ்க்கை பலவீனமடைந்ததை போல உணரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 8
 

                    10-மகரம்

மன அமைதிக்காக டென்களை தீர்த்திடுங்கள். பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். ஆனால் குடும்பத்தினரின் உதவியால் அவற்றை உங்களால் தீர்க்க முடியும். இதெல்லாம் வாழ்வில் சகஜம். இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. எல்லோருக்கும் எல்லா நேரமும் சூரிய வெளிச்சமாகவோ அல்லது மேகம் மூடிய இருளாகவோ இருந்துவிடாது. அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் - குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. எந்த புதிய திட்டத்தையும் எடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கவும். இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் - நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். இன்று கடினமான நாள்.

அதிர்ஷ்ட எண்: 8
 

              11-கும்பம்

முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஊகங்கள் பேரழிவாக அமையும் - எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்த இரண்டையும் சமமாக பாவித்திடுங்கள். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். சீனியர் லெவலில் உள்ளவர்களுடன் சில எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6
 

             12-மீனம்

எடையில் ஒரு கண் இருக்கட்டும். அதிகம் சாப்பிடாதீர்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்கள் அன்புக்குரியவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். நீங்கள் செய்த ஒரு நற் செயலால் இதுவரை உங்கள் எதிரியாய் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுவார்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று உங்கள் திருமண வாழ்வில் கடினமான நாள். அதனால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 4
 




Recommended For You