PUBLIC NEWS TV-இன்றைய 12 ராசிபலன்கள் படியுங்கள்

PUBLIC NEWS TV-இன்றைய 12 ராசிபலன்கள் படியுங்கள்

PUBLISHED:04-Dec-2017

இன்றைய 12   ராசிபலன்கள்
                   04-12-2017
             திங்கட்கிழமை

 

             1-மேஷம்

கண்புரை நோய் உள்ளவர்கள் மாசுபட்ட பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் புகை உங்கள் கண்களை மேலும் பாதிக்கலாம். முடியுமானால் சூரிய வெளிச்சத்தில் அதிகம் செல்வதைத் தவிர்த்திடுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது - பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். காதல் உணர்வான மகிழ்ச்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு, எனவே ஆபீசில் நிதானத்துடன் செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 3
 

               2-ரிஷபம்

வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள். பிறரின் நன்மைக்காக பயன்படுத்தாவிட்டால், அழுகிவிடும் இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். பள்ளிக்கூட பிராஜெக்ட்களை முடிக்க பிள்ளைகள் உங்கள் உதவியை நாடலாம். ரொமாண்டிக்கான மூவ்களுக்கு இன்று பலன் இருக்காது. செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்கள் துணைக்கும் உங்களுக்கும் இடையே இன்று கருத்து வேறுபாட்டால் வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 2
 

                3-மிதுனம்

தந்தை சொத்தை தர மறுக்கலாம். ஆனால் மனதை இழந்துவிடாதீர்கள். வளமை வராமல் தள்ளிப்போனாலும், பிரிவாற்றாமை அதை வலுப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். தவறாக பிரிந்து கொண்டு ஏற்பட்ட பிணக்கு தீர்ந்து இன்று உங்கள் துணையுடன் இனிமையான மாலை பொழுதல் கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9

             4-கடகம்

மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம். குடும்பத்தினர் நிறைய தேவையில் இருப்பார்கள். காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். உங்கள் மண வாழ்வில் இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.

அதிர்ஷ்ட எண்: 4
 

               5-சிம்மம்

இன்று நீங்கள் ரிலாக்ஸ் செய்து நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து நாளை அருமையானதாக்கிடுங்கள். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று அதிகமாக உண்ட்தலோ அல்லது குடித்த்தாலோ உங்களின் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 2
 

            6-கன்னி

புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். உடனடியாக தேவைப்படாத பொருட்களுக்காக செலவு செய்வதன் மூலம் உங்கள் துணைவரை அப்செட் செய்வீர்கள். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். தொடர்ச்சியான ஒப்புதல் இல்லாத நிலையால் பிரச்சினை ஏற்படும். உங்கள் துணைவருடன் ஒத்துப் போக ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9
 

             7-துலாம்

சில டென்சன்களும் கருத்து வேறுபாடுகளும் வெறுப்பையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். வெற்றி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்கு நல்ல நேரம் இது. உங்கள் குடும்பத்தினர் அளித்த ஆதரவு மற்றும் முயற்சிகளுக்கு நன்றி சொல்லுங்கள். வீட்டில் பிரச்சினைகள் எழக் கூடும் - ஆனால் சிறிய விஷயங்களுக்காக துணைவரை குறைசொல்வதைத் தவிர்த்திடுங்கள். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். உங்கள் துணையின் மூட் இன்று சரியில்லாததால் நீங்கள் சலிப்படைய கூடும்.

அதிர்ஷ்ட எண்: 3
 

              8-விருச்சிகம்

இடையூறான உணர்வுகள் மற்றும் உந்துதல்களை கட்டுப்படுத்துங்கள். பழமையான சிந்தனைகள் / பழைய ஐடியாக்கள் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கலாம் - வளர்ச்சியை பாதிக்கலாம். மேற்கொண்டு முன்னேற தடையாக இருக்கலாம். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். இன்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் மீது ஏதாவது முடிவை நீங்கள் திணிக்க விரும்பினால், உங்கள் நலன்தான் பாதிக்கப்படும். பொறுமையாக நிலைமையைக் கையாள்வதுதான் சாதகமான ரிசல்ட் பெறுவதற்கான ஒரே வழி. எதிர்பாராத ரொமாண்டிக் எண்ணங்கள். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்களுக்கு உங்கள் வாழ்க்கை துணைக்கும் இன்று ஒரு இனிமையான தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்: 5
 

              9-தனுசு

குழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்பட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது உங்கள் கருத்துகளைத் திணிக்காதீர்கள். அது உங்கள் நலனுக்கு நல்லதாக இருக்காது. தேவையில்லாமல் அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்துவீர்கள். காதல் விவகாரங்களில் நிர்பந்தம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. உங்கள் துணையை நீங்கள் இன்று தவறாக நினைக்க கூடும் இதனால் நீங்கள் அப்செட்டாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2
 

            10-மகரம்

அழுத்தத்தை விரட்டிட குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளின் குணமாக்கும் சக்தியை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவர்கள்தான் பூமியில் அதிக சக்திவாய்ந்த ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமானவர்கள். புத்துணர்வு பெற்றதை நீங்களே உணர்வீர்கள். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். புதுமனை புகுவிழாவுக்கு உகந்த நாள். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். மற்றவர் உங்களை பற்றி கூறிய ஒரு தவறான விஷயத்தால் உங்கள் துணை உங்கள் மேல் கோபமடையலாம். ஆனால் உங்கள் அன்பும் அரவணைப்பும் அவரை சமாதானப்படுத்திவிடும்.

அதிர்ஷ்ட எண்: 2
 

          11-கும்பம்

வாகனம் ஓட்டும்போது, குறிப்பாக வளைவுகளில் கவனமாக இருக்கவும். யாரோ ஒருவருடைய கவனக் குறைவு உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தவாம். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். நியாயமாக இருக்க முயற்சி செய்யுங்கள், குறிப்பாக நீங்கள் நேசிக்கும் நபர்கள் மற்றும் உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களிடம். உங்களின் வெளிப்படையில்லாத வாழ்க்கை துணைவரை டென்சனாக்கும். சில மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள் உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8
 

            12-மீனம்

வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது - உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் - எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். வேலையில் நீங்கள் அதிகம் கவனமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் புறக்கணிக்கப்படும். மற்றவர்களின் தலையீட்டால் உரசல்கள் ஏற்படும். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய - நிறைய பிரச்சினைகள் இருக்கும். இன்று உங்கள் திறுமண வாழ்வில் ஏற்பட்ட சிக்கல் உங்கள் கை மீறி செல்லும்.

அதிர்ஷ்ட எண்: 6
 




Recommended For You