PUBLIC NEWS TV- 09/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 09/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:09-Dec-2017

இன்றைய12   ராசிபலன்கள்
                   09-12-2017
                   சனிக்கிழமை
 

              1-மேஷம்

உங்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். இன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைப்பதால் நீங்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். உங்கள் கண்கள் பிரகாசமாக உள்ளன. காதலரின் இரவையும் அது வெளிச்சமாக்கும். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1
 

             2-ரிஷபம்

சில கிரியேட்டிவ் வேலையில் ஈடுபாடு காட்டுங்கள். வெறுமனே அமர்ந்திருக்கும் பழக்கம் மன அமைதிக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். காதலுக்கு உரியவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் அவர்கள் மன உளைச்சல் அடைவார்கள். மனதிற்கினியவரின் கடுமையான வார்த்தைகளால் மனம் சஞ்சலப்பட்டிருக்கும். இன்று உங்கள் உயிரிலே கலந்து விட்ட அந்த காதல் துணை நாள் முழுவதும் உங்களை பற்ரியே சிந்தித்து கொண்டிருப்பார். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 9
 

           3-மிதுனம்

குடும்பத்தின் நலனுக்கு எதிராக செயல்படாதீர்கள். அவர்களின் கருத்துகளில் ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களின் செயல்பாடு சீரியசான பிரச்சினையை ஏற்படுத்தலாம். மாறாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த வேண்டும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். வீட்டு விவகாரங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு வேலையை சரியாகச் செய்ய முடியாமல் பாதிக்கும். சிறிய பிரச்சினைக்கு கூட உங்கள் டார்லிங்குடன் உறவில் பிரச்சினை எழக்கூடும். கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். இன்று உங்கள் துணையின் உடல் னலத்தை எண்னி நீங்கள் கவலையுறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
 

                3-கடகம்

ஓய்வு முக்கியமானதாக இருக்கும் நாள் - சமீப காலமாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இத அவசியம் - பொழுதுபோக்கும் மனமகிழ் நிகழ்வுகளும் நீங்கள் ரிலாக்ஸ் பண்ண உதவும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். இது ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்லது சில பிரச்சினைகளை ஆரம்பிக்கும் வேலையை செய்வதற்கான நாள் அல்ல. திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்களை குழப்பமடையச் செய்யும். இன்று நீங்கள்தான் கவனிக்கப்படுவீர்கள் - வெற்றி உங்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். அவரவர்க்கான தனிப்பட்ட இடம் திருமண வாழ்வில் முக்கியம். இன்று உங்களது நெருக்கத்தில் காதல் தீ பற்றி எரியும்!

அதிர்ஷ்ட எண்: 2
 

                 5-சிம்மம்

உங்கள் பெற்றோரை புறக்கணிப்பது உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கலாம். நல்ல நேரங்கள் அதிக காலம் நீடிக்காது. மனிதனின் செயல்கள் ஒலியின் அலைகளைப் போன்றவை. அது மெலோடியாகவோ அல்லது கொடூரமான சப்தமாகவோ எதிரொலியாக திரும்பி வரும். நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் பெறுவோம். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தில் விரைப்பாக இருக்காதீர்கள் - அது அமைதியைக் கெடுக்கும். உங்கள் துணைவரிடம் உணர்வுரீதியில் பிளாக்மெயில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது. அந்த அற்புதத்தை உணருங்கள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் அலுவலக வேலை இன்று உங்கள் துணையின் நடத்தையால் பாதிப்படையும்.

அதிர்ஷ்ட எண்: 9
 

                  6-கன்னி

ரிலாக்ஸ் செய்வதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். குழந்தைகளை சமாளிப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுவீர்கள். புதிய காதல் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அந்தரங்கமான, ரகசியமான தகவல்களை வெளிப்படுத்தாதீர்கள். காரணங்கள் சொல்வதை உங்கள் பாஸ் ஏற்றுக் கொள்ள மாட்டார் - அவரிடம் நல்ல பெயரை தக்க வைக்க வேலையை செய்யுங்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.

அதிர்ஷ்ட எண்: 7
 

                   7-துலாம்

சரியான உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். எண்ணெய் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். கமிஷன்கள் - டிவிடெண்ட்கள் - அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்றைக்கு உங்கள் காதலர் அவசியமற்ற கோரிக்கைகளை வைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். நீங்கள் நினைத்த்து போல எதுவும் நடப்பதில்லை என உங்களுக்கு தோன்றலாம், அந்த நெகட்டிவ் மனப்பான்மையை நீக்கி பாசிடிவ் உணர்வுடன் இன்று செயல்படவும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு, எனவே ஆபீசில் நிதானத்துடன் செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 1
 

               8-விருச்சிகம்

உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் குடும்பத்தில் யாராவது உங்கள் பொறுமையை சோதித்தால் - நிலைமை கைமீறி போவதற்கு முன்பு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் காதல் துணையில் மற்றொரு இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள். போட்டி வரும்போது வேலைக்கான அட்டவணை கடுமையாக இருக்கும். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். இன்று, உங்கள் வாழ்க்கை துணை கற்கண்டை விட இனிமையானவர் என்று உணருவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3
 

            9-தனுசு

முந்தைய முயற்சிகளின் மூலம் கிடைக்கும் வெற்றி உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. குடும்பம் சம்பந்தமான சில பிரச்சினைகள் குடும்பத்தில் அமைதி மற்றும் ஆரோக்கிய சூழ்நிலையைக் கெடுக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் மிகவும் வருந்துவீர்கள். உங்களை உங்கள் உடன் பணிபுரிபவர்களும் சீனியர்களும் எவ்வளவு தான் கோபமடைய செய்தாலும் புத்தரை போல இன்று அமைதியை கடைபிடிப்பது நல்லது. சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். நீங்களும் உங்கள் துணையும் எவ்வளவு தான் சண்டையிட்டாலும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறீர்கள் அன்பதை மறக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்: 9
 

                10-மகரம்

உங்கள் வெறுப்பைக் கொல்வதற்கு நல்லிணக்கமான இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அன்பைவிட அதிக சக்திவாய்ந்தது, உடலை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். நீங்கள் நீண்ட காலமாக செய்து வரும் முக்கியமான பிராஜக்ட் தாமதமாகும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். அதிக செலவு உங்கள் இருவருக்கும் இடையில் சண்டையை ஏற்படுத்தலாம்.

அதிர்ஷ்ட எண்: 9
 

            11-கும்பம்

ஓய்வில்லாத தன்மை உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தலாம். கொஞ்ச தூரம் நடந்து சென்று சுத்தமான காற்றை சுவாசித்து இதைப் போக்கிடுங்கள். உங்களின் பாசிடிவான சிந்தனை உங்களுக்கு அதிகமாக உதவி செய்யும். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - ஆனால் கவனமாக இருங்கள். கடினமான அல்லது சமம் இல்லாத வார்த்தைகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அப்செட் செய்யக் கூடும். அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6
 

            12-மீனம்

உற்சாகம் தரும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். மகிழ்ச்சியான - சக்திமிக்க - காதல் மன நிலையில் - உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். உங்கள் அன்புக்குரியவர் கடினமான மனநிலையை இன்று உருவாக்குவார். உங்களுடைய கோபமான நடத்தை நல்ல நட்பைக் கெடுத்துவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துங்கள். உங்களை வெளிப்படுத்திக் கொண்டு - கிரியேட்டிவ் இயல்புள்ள வேலையில் ஈடுபடுவதற்கு நல்ல நேரம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் துணைக்கு உங்கள் மேல் சந்தேகம் வரக்கூடும். இதனால் நீங்கள் வருத்தமடையலாம்.

அதிர்ஷ்ட எண்: 4
 




Recommended For You