PUBLIC NEWS TV- 10/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- 10/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:10-Dec-2017


     இன்றைய 12 ராசிபலன்கள்
                   10-12-2017
                        ஞாயிற்றுக்கிழமை

 

                                     1-மேஷம்

ஒரு நண்பரின் ஜோதிட வழிகாட்டுதல் உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் செய்ய ஊக்கம் தருவதாக இருக்கும். முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். தபால் மூலம் வரும் ஒரு முக்கியமான தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே மகிழ்ச்சியைக் கொண்டு வரும். காதல் வேதனைகள் இன்று உங்களை தூங்க விடாது. செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான பிணக்குகளுக்கு பிறகு உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 6
            

                                  2-ரிஷபம்

இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். அலுவலக டென்சனை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். அது குடும்ப மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும். அலுவலகத்திலேயே அதை தீர்த்துவிட்டு, வீட்டில் குடும்ப வாழ்வை அனுபவிப்பது நல்லது. உங்கள் மனதிற்கு இனியவரை காணலாம் என்பதால், உங்களை வாட்டி வந்த தனிமைக்கு முடிவு ஏற்படலாம். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. தனையே அறியாமல் உங்கள் துணை செய்யும் ஒரு விஷயம் இன்று உங்கள் நாளை மறக்க முடியாததாக்கும்.

அதிர்ஷ்ட எண்: 5
 

                                  3-மிதுனம்

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்தால் பலன் கிடைக்கக் கூடிய நாள். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். மத இடம் செல்வது அல்லது துறவி ஒருவரை சந்திப்பது உங்களுக்கு ஆறுதலையும் மன அமைதியையும் கொடுக்கும். உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். மன ரீதியாக இணை பிரியாத ஜோடிகளான பின் உடல் ரீதியான நெருக்கம் மேலும் இன்பம் தரும்.

அதிர்ஷ்ட எண்: 3
 

                                      4-கடகம்

உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து உடலை பிட்டாக வைத்திடுங்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். வேலையில் பிரஸ்ஸர் குறைவாக இருக்கும் நாள். குடும்பத்தினருடன் நேரத்தை ஆனந்தமாக செலவிடுவீர்கள். காதலுக்கு உரியவரின் நடத்தையால் உணர்ச்சிவயப்படுவீர்கள் - நிதானத்தை இழக்காதீர்கள். வாழ்நாள் முழுக்க உங்களை நீங்களே சபித்துக் கொள்ளும் வகையில் பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாமல் தவிர்த்திடுங்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு, எனவே ஆபீசில் நிதானத்துடன் செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
 

                                  5-சிம்மம்

வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது - உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். உடல் நலமின்றி இருக்கும் உறவினரை போய்ப் பாருங்கள். இன்றைக்கு ரொமான்சுக்கு வாய்ப்பு இல்லை. உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் துணையின் உடல் நலம் இன்று பாதிப்படையலாம்.

அதிர்ஷ்ட எண்: 5
 

                                       6-கன்னி

துறவி போன்ற ஒருவரி்ன் ஆசிர்வாதத்தால் மன அமைதி கிடைக்கும். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். நியாயமாக இருக்க முயற்சி செய்யுங்கள், குறிப்பாக நீங்கள் நேசிக்கும் நபர்கள் மற்றும் உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களிடம். ரொமாண்டிக் சந்திப்பு அதிக உற்சாகம் தரும், ஆனால் அதிக நேரம் நீடிக்காது. ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்கள் துணையை நீங்கள் இன்று தவறாக நினைக்க கூடும் இதனால் நீங்கள் அப்செட்டாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3
 

                                      7-துலாம்

மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து பெறுவது அல்ல, நமக்குள்ளே இருப்பது என்பதை உணர்த்துவதால் உங்களைப் போல நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளும் எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் தோற்றத்தில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் குடும்பத்தினரை வருத்தமடையச் செய்யும். ஒரே இடத்தில் இருந்தாலும் காதல் உங்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து செல்லும் வலிமையுடையது. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் ட்ரிப் செல்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று, மனதுக்கினியவருடன் பொழுதை கழிப்பது எத்தனை இன்பமானது என்பதை அறிவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6
 

                                8-விருச்சிகம்

அபரிமிதமான முயற்சி மற்றும் உரிய நேரத்தில் குடும்பத்தினர் அளிக்கும் ஆதரவால், விரும்பிய ரிசல்ட்கள் கிடைக்கும். ஆனால் இப்போதைய உற்சாகம் தொடர்ந்திட தொடர்ந்து உழைத்துக் கொண்டிருங்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். உரிய காலத்தில் நீங்கள் செய்யும் உதவியால் ஒருவரை துரதிருஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவீர்கள். உங்கள் துணைவரின் குடும்பத்திருடைய தலையீடுகளால் உங்கலுடைய நாள் அப்செட்டாக இருக்கும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் அண்டை வீட்டார் உங்களை பற்றி உறவினர்களிடம் தவறாக கூறக்கூடும்..

அதிர்ஷ்ட எண்: 7
 

                                  9-தனுசு

வாகனம் ஓட்டும்போது, குறிப்பாக வளைவுகளில் கவனமாக இருக்கவும். யாரோ ஒருவருடைய கவனக் குறைவு உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தவாம். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். இன்று கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருடன் அன்பாக செலவிடுங்கள். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். உங்கள் துணை இன்று மோசமான மூடில் இருப்பது போல் தெரிகிறது.

அதிர்ஷ்ட எண்: 4
 

                                     10-மகரம்

வழக்கத்தைவிட சக்தி குறைவாக இருப்பதை உணர்வீர்கள் - கூடுதல் வேலையை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள் - சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு, அப்பாயின்மெண்ட்களை வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுங்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். 'சில எதிர்பாராத பிரச்சினைகளால் குடும்பத்தில் அமைதி கெடும். ஆனால் கவலைப்பட எதுவும் இல்லை. காலப்போக்கில் இது தீர்க்கப்படும். இப்போதைக்கு அதை லைட்டாக எடுத்துக் கொண்டால் போதும். சாக்லேட்டை இஞ்சி மற்றும் ரோஜாக்களின் வாசத்துடன் நீங்கள் நுகர்ந்துள்ளீர்களா? இன்று உங்கள் காதல் வாழ்வு அத்தகைய சுவை உடையதாக இருக்கும். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. இன்று உங்கள் துணை ஒரு ஸ்பெஷலான பரிசை உங்களுக்கு அளிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 4
 

                            11-கும்பம்

சக்தி அதிகமாக இருக்கும். இன்று அசாதாரணமாக எதையாவது செய்வீர்கள். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். நண்பர்களுடன் அதிக ஈடுபாடு காட்டி வீட்டில் அல்லது படிப்பில் அதிக கவனம் காட்டாத காரணத்தால் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்று ஒரு மனம் உடைவதை தடுத்து நிறுத்துவீர்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இந்த நாள் வசந்த காலத்தை போன்றது. நீங்கள் இருவர் மட்டுமே ரொமாந்ஸில் உலகையே மறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 2
 

                            12-மீனம்

காபி பழக்கத்தை விட்டொழியுங்கள், குறிப்பாக இதய நோயாளிகள். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். குழந்தைகளுக்கு வீட்டு வேலையை முடிக்க உதவிக்கரம் நீட்ட வேண்டிய நேரம். இன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். வாழ்க்கையே இனிமையாகும் நல்ல துணை அமைந்தால், அந்த பெருமகிழ்சியில் நீங்கள் இன்று மூழகி விடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9
 




Recommended For You