PUBLIC NEWS TV- 29/12/2017 இன்றைய 12 ராசிபலன்கள்

PUBLISHED:05-Jan-2018

               இன்றைய 12  ராசிபலன்
                        29-12-2017
                        வெள்ளிக்கிழமை

                1மேஷம்

நாளை மகிழ்வாக வைத்துக் கொள்ள மன டென்சன், அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்பத்தில் ஆதிக்கம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. அவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் போக்கு மாறியிருப்பதால் அவர்கள் எல்லையில்லா ஆனந்தம் கொள்வார்கள். வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் திருமண வாழ்வை பாதித்துவிடும். வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க அமைதியாகவும் தைரியமாகவும் இருங்கள். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். ஒரே வீட்டில் ஒருவருடன் இணைந்து வாழும்போது சண்டைகள் ஏற்படுவது இயல்பு. இன்று உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 2

              2-ரிஷபம்

ஓய்வு முக்கியமானதாக இருக்கும் நாள் - சமீப காலமாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இத அவசியம் - பொழுதுபோக்கும் மனமகிழ் நிகழ்வுகளும் நீங்கள் ரிலாக்ஸ் பண்ண உதவும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். நாளின் பிற்பகுதியை உற்சாகமானதாகவும் பொழுதுபோக்கானதாகவும் ஆக்கிட ஏதாவது பிக்ஸ் பண்ணுங்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். எதிர்கால டிரெண்ட்கள் பற்றிய ஒரு பார்வையை அது தரும். 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இன்று உங்கள் வாழ்க்கை தணைவர்/துணைவி தன் இன்னொரு பக்கமான தேவதை முகத்தை காண்பிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 2

                   3-மிதுனம்

அளவுக்கு அதிகமான கவலை மன அழுத்தம், ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும். காதலருடன் வெளியில் செல்லும் திட்டம் ரத்தாகும் என்பதால் ஏமாற்றம் ஏற்படும். உங்கள் நேரத்தில் அதிகமானதை பிறக் பெற விரும்பலாம் - அவர்களுக்காக எந்த வாக்குறுதியும் அளிப்பதற்கு முன்னாள் உங்கள் வேலை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் கனிவு மற்றும் தாராள மனதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் துணையில் சின்ன சின்ன எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறினால் அதாவது அவருக்கு பிடித்த உணவை வாங்கி கொடுக்காத்து அல்லது அன்பான அணைப்பை தராத்து போன்ர விஷயங்கள் அவரை காயப்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 9

                    4-கடகம்

உங்களின் பொறுப்பற்ற கருத்துகளால் குடும்பத்தினரின் உணர்வுகலை நீங்கள் புண்படுத்தலாம். முடியுமானால் கருத்துகளை சொல்வதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு எதிராக அமைந்து, குடும்பத்தின் பெயருக்கு களங்கமாகிவிடக் கூடும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். அலுவலக வேலையில் அதிக ஈடுபாடு காட்டுவதால், உங்கள் துணைவருடனான உறவு பாதிக்கப்படலாம். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். இன்று ஆபீசில் சிறிது கடினமான நாள் போல் தோன்றுகிறது. இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வில் ஒரு அழகான திருப்பத்தை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

                  5-சிம்மம்

உடல்நலம் நன்றாக இருக்கும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். உறவினர்கள் உங்கள் துயரத்தில் பங்கெடுப்பார்கள். உங்கள் பிரச்சினைகளை அவர்களுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக அவற்றைத் தீ்ர்த்துவிடுவீர்கள். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான்! சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் இன்று ஆபீசில் மாட்டிக்கொள்ள கூடும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வில் ஒரு அழகான திருப்பத்தை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2

                  6-கன்னி

நோயைப் பற்றி பேசுவதை தவிர்த்திடுங்கள். நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுங்கள். ஏனெனில் நோயைப் பற்றி அதிகம் பேசினால், அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான நேரம் வீட்டு வேலையில் பிசியாக இருப்பீர்கள். ரொமாண்டிக்கான சிக்கல் எழுந்து மகிழ்ச்சிக்கு கூடுதல் சுவை சேர்க்கும். உங்கள் வேலையிலும், முன்னுரிமை தரும் விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உங்கள் துணை இன்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.

அதிர்ஷ்ட எண்: 9

                 7-துலாம்

தாயாகப் போகும் பெண்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டிய நாள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது ஆனந்தமாக இருக்கும். உடன் யாரும் இல்லாவிட்டால் - உங்கள் புன்னகைக்கு அர்த்தம் கிையாது - சிரிப்புக்கு சப்தம் இல்லை சிலருக்கு பிசினஸ் மற்றும் கல்வியில் ஆதாயம் கிடைக்கும். தொடர்புகொள்ளும் நுட்பத்துக்கும், வேலைத் திறனுக்கும் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும். இதனால் நீங்கள் கோபமடையலாம்.

அதிர்ஷ்ட எண்: 2

                     8-விருச்சிகம்

இன்று நீங்கள் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் - அது உங்களை பதற்றமாக செய்யலாம். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். பக்கத்து வீட்டாருடன் வாய்த்தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். ஆனால் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் அது நிலைமை மேலும் மோசமாக்கும். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், உங்களுடன் யாருமே தகராறு செய்ய முடியாது. நல்லுறவு பராமரிக்க முயற்சி செய்யுங்கள். ரொமான்ஸ் உற்சாகமாக இருக்கும் - எனவே நீங்கள் காதலிப்பவரை தொடர்பு கொள்ளுங்கள், இந்த நாளை சிறப்பானதாக ஆக்குங்கள். அதிக வேலை அழுத்தம் இன்று ஏற்படலாம். எனவே கவனத்துடன் செயல்படவும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் துணையின் அன்புக்காக ஏங்குகிறீர்கள் என்றால் அது இன்று அபரிமிதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 4

               9-தனுசு

சீக்கிரம் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று உண்மையில் நீங்கள் ஆனந்தப்படும் செயல்களைச் செய்யுங்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. குடும்பத்தினர் நிறைய தேவையில் இருப்பார்கள். இன்று நீங்கள் செழுமையான காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உங்கள் துணையின் உள்ளதின் அழகு இன்று உங்களால் உணரப்படும்.

அதிர்ஷ்ட எண்: 1

              10-மகரம்

நல்ல ஆரோக்கியம் இருந்தால் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும். குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் - குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. குடும்ப ரகசிய செய்தி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். அன்புக்குரியவரை இன்று மன்னிக்க மறக்காதீர்கள். இன்று உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒரு ஹலோ சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 1

           11-கும்பம்

கடந்த காலத்தைய மோசமான முடிவுகள் இன்று உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் - நீங்கள் ஆதரவின்றி நிற்பதாக, அடுத்து என்ன முடிவெடுக்க முடியாதவராக இருப்பீர்கள் - மற்றவர்களின் உதவியை நாடுங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். விஷயங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திட சகோதரருக்கு உதவுங்கள். மோதல்களுக்கு தேவையில்லாமல் இடம் தராதீர்கள். மாறாக சுமுகமாக அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவரிடம் கடுமையாக எதையும் சொல்லாதிருக்க முயற்சி செய்யுங்கள் - இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள். உங்களது நற்செய்கைகளுக்காக வேலையில் இன்று நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள். இன்று நீங்கள் ஷாப்பிங் சென்றால் உங்களுக்கு அருமையான ஒரு டிரஸ் தேர்வு செய்வீர்கள். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 8

       12-மீனம்

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்களின் பிடிவாதமான குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுவார்கள். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். வேலை நேரத்தில் சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் இன்று சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். உங்கள் துணையின் கடுமையான பக்கத்தை இன்று நீங்கள் கண்டு அதனால் வேதனை படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 6
 




Recommended For You