PUBLIC NEWS TV - ரூபிக் கன சதுர விளையாட்டில் கின்னஸ் உலக சாதனை முயற்சி | World Record Rubik's Cubes

PUBLISHED:03-Aug-2020

ரூபிக் கன சதுர விளையாட்டில் கின்னஸ் உலக சாதனை முயற்சி 

சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் இளையராம் சேகர் 25 வயதுடைய இளைஞர் 

பெரம்பூரில் உள்ள கல்கி அரங்கநாதன் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். 

இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக ரூபிக் கன சதுர விளையாட்டில் உலக அளவில் இதுவரை நான்கு கின்னஸ் உலக சாதனைகளை படைத்து உள்ளார். 

தற்போது 2 வருடங்களாக பயிற்சி மேற்கொண்டு தனது 5ஆம் கின்னஸ் சாதனையை இன்று நிறைவு செய்து உள்ளார். 

இந்த விளையாட்டில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த அந்தோணி புரூக்ஸ் என்பவர் நீருக்குள் மூழ்கி ஒரே மூச்சில் 5 ரூபிக் கன சதுர புதிருக்கு தீர்வு கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தார். 

அந்த உலக சாதனையை முறியடிக்க 6 ரூபிக் கன சதுர புதிருக்கு சுமார் 2 நிமிடம் 17 வினாடி நீருக்குள் மூழ்கி ஒரே மூச்சில் தீர்வு கண்டு புதிய சாதனைக்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். 




Recommended For You