சென்னை மாதவரத்தில் மாபெரும் அபாகஸ் போட்டி நடைபெற்றது
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணிதத்தை எளிய முறையில் கற்றுக்கொள்ள ஏதுவாக அபாகஸ் கல்வி பயன்படுகிறது.
அபாகஸ் கல்வி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.
இந்த நிலையில் சென்னை மாதவரம் தபால்பெட்டி அருகில் தனியார் திருமண மண்டபத்தில் மைக்ரோ பிரைன் அபாகஸ் கல்வி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கு மாபெரும் பிரமாண்ட போட்டி நடைபெற்றது.
ஜீனியஸ் கான்டஸ்ட் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியை மைக்ரோ பிரைன் அபாகஸ் நிறுவனத் தலைவர் விஜயலக்ஷ்மி தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரையிலான போட்டியில் மாணவ மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்
பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
சிறப்பு விருந்தினர்கள் நியூ ஸ்டார் சிட்டி நிர்வாக இயக்குனர் ஜாபர் உசேன் , வெல்ஸ் பார்மசி சஞ்சய் பாபு , சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் பாலகிருஷ்ணன்-சீனிவாசன் , விபு ஹெல்த்கேர் எல்.எல்.பி. நிறுவனர் ராஜு , சுதந்திர போராட்ட வீரரின் மகள் டாக்டர் லட்சுமி ராஜாராம் , வேலாயுதம் , எட்வின் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்..
போட்டி இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சேக் தாவுத் நன்றி தெரிவித்தார்
மேலும் இதில் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை கண்டுகளித்தனர்.
பப்ளிக் நியூஸ் டிவி செய்தியாளர் எம்.கிருஷ்ணகுமார்