Public News Tv Tamil - SRM கல்லூரியில் இலவச பி.டெக் அட்மிஷன் வழங்கப்படுகிறது..

Public News Tv Tamil - SRM கல்லூரியில் இலவச பி.டெக் அட்மிஷன் வழங்கப்படுகிறது..

PUBLISHED:03-Jun-2023

பணியின் போது வீர மரணம் அடைந்த   சிஆர்பிஎப் வீரர்களின் வாரிசுகளுக்கு எஸ்ஆர்எம் ல் இலவச பி. டெக் அட்மிஷன் மற்றும் பாதுகாப்பு பணியில்  நவீன அறிவியல் தொழில்நுட்பம்

தீவிரவாதம் மற்றும் கலவரத்தில் பலியான மத்திய ரிசர்வு போலீஸ் படை வீரர்களின் 3 வாரிசுகளுக்கு ஆண்டுதோறும் எஸ்ஆர்எம் ல் பி. டெக் பொறியியல் பட்டப்படிப்பில் இலவச அட்மிஷன் வழங்கவும், பாதுகாப்பு பணியில்  நவீன அறிவியல் தொழில்நுட்ப திட்டம் என  2 ஒப்பந்தம் எஸ்ஆர்எம் ல் நடைபெற்றது.

நாட்டில் பொறியியல், மருத்துவம், மேலாண்மை, வேளாண்மை,சட்டம்,வேளாண்மை அறிவியல்,கலை மற்றும் அறிவியல் உயர்கல்வி வழங்குவதில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது. ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இந்த நிறுவனம், அதற்காக ஏராளமான நவீன சாதனங்கள் கொண்ட ஆய்வகங்களை அமைத்துள்ளது.மேலும் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் கல்வி பரிவர்த்தனைக்காக ஒப்பந்தங்கள் செய்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் புதிய திட்டங்கள் சம்மந்தமாக ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி உதவிகள் பெற்றுள்ளது.  

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் பாதுகாப்பு பணியின்போது  
தீவிரவாதம் மற்றும் கலவரத்தில் பலியான மத்திய ரிசர்வு போலீஸ் படை வீரர்களின் (CRPF Central Reserve Police Force ) 3 வாரிசுகளுக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் பி. டெக் பொறியியல் பட்டப்படிப்பில் இலவச அட்மிஷன் வழங்குகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும், பாதுகாப்பு பணியில் நவீன தொழில்நுட்ப திட்டங்கள் கையாலுதல் பற்றிய ஒப்பந்தம் என 2 ஒப்பந்தங்கள் எஸ்ஆர்எம் ல் நடைபெற்றது.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SRMIST SRM Insititute of Science and Technology)துணைவேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன்,மத்திய ரிசர்வு போலீஸ் படை வீரர்களின் குடும்ப நல சங்கத்தின் மண்டல தலைவர் ஜெயசீலி
தினகரன் ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு முதல் ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

பாதுகாப்பு பணியில் நவீன அறிவியல் தகவல் தொழில்நுட்ப திட்டங்கள் பரிவர்த்தனை பற்றிய மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்ஆர்எம் துணைவேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன்,மத்திய ரிசர்வு போலீஸ் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IG Inspector general ) ராஜேஷ் குமார்  ஆகியோர்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தங்கள் மத்திய ரிசர்வு போலீஸ் படை டைரக்டர் ஜெனரல் டாக்டர் எஸ். எல். தவுசன், மத்திய ரிசர்வு போலீஸ் படை வீரர்களின் குடும்ப நல சங்கத்தின் தலைவர் அஜிதா தவுசன்,எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில்  மத்திய ரிசர்வு போலீஸ் படை டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஆவடி )எம். தினகரன், எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி டீன் முனைவர் டி. வி.. கோபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஒப்பந்ததின் மூலம் எஸ்ஆர்எம் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவகள், பொறியியல் மற்றும் பாதுகாப்பு கல்வி மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய ரிசர்வு போலீஸ் படை முகாம்களுக்கு சென்று அதன் செயல்பாடுளை அறிந்துகொள்ளவும், அவர்களோடு இணைந்து பாதுகாப்பு திட்டங்கள் உருவாக்கவும் உள்ளனர்.




Recommended For You