PUBLIC NEWS TV - அதிமுக தொழில் நுட்பப்பிரிவு பகுதி செயலாளர் K.கார்த்திக் வாக்கு சேகரிப்பு..!

PUBLIC NEWS TV - அதிமுக தொழில் நுட்பப்பிரிவு பகுதி செயலாளர் K.கார்த்திக் வாக்கு சேகரிப்பு..!

PUBLISHED:06-Oct-2021

திருவொற்றியூர் அதிமுக மேற்கு பகுதி செயலாளர் K.குப்பன் Ex Mla இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு...!

திருவொற்றியூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் , சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் M.தேவி அவர்களை ஆதரித்து திருவொற்றியூர் மேற்கு பகுதி தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் K.கார்த்திக் தலைமையில்

திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.குப்பன் முன்னிலையில் P.கார்மேகம் , சாரதிபார்த்திபன் , ஆகியோர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

இதன் முன்னதாக பாக பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  

அருகில் வட்ட செயலாளர்கள் E.வேலாயுதம் , முல்லை  ராஜசேகர் , M.ஜோசப் , சாரதி பிரகாஷ் , சிவக்குமார் , சாக்ரடீஸ் , மாணவரணி பகுதி செயலாளர் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் , வட்ட பொருளாளர் S.P.புகழேந்தி ,  கோபாலகிருஷ்ணன் , ஜோதி , எட்வின் , விஜய் , ட.ஜான் , பாலு , N.சதிஸ் , பால்கார் , ரமேஷ் , வள்ளியம்மாள் , கற்பகயம்மாள் உட்பட ஒன்றிய , ஊராட்சி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.




Recommended For You