சென்னை ஆர்.கே நகர் தொகுதி தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை சார்பில் அரசு அச்சக பணியாளர்களுக்கு 2022-2023 சட்டப்பேரவை அறிவிப்பின்படி 34,49,25,222 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 96 குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , சென்னை நகரமைப்பு குழுத் தலைவரும் மாவட்ட செயலாளருமான தா.இளைய அருணா , சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் , பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் , எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வெ. ஷோபனா , 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன் , மற்றும் பொதுப்பணி துறை உயர் அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.