Public News Tv Tamil - சென்னை மணலியில் வைரம் மற்றும் தங்க நகைகள் கண்காட்சி

PUBLISHED:17-Aug-2023

சென்னை கிருஷ்ணா ஜுவல் பார்க் ஷோரூமில்
கிஸ்னா வைர மற்றும் தங்க நகைகள் கண்காட்சி
–––––

ஆகஸ்ட் 16 முதல் 21 வரை நடைபெறுகிறது

–––––

சென்னை, ஆக.16–

சென்னை மணலியில் உள்ள கிருஷ்ணா ஜுவல் பார்க் ஷோரூமில் ஹரி கிருஷ்ணா குழுமத்தின்  கிஸ்னா வைர மற்றும் தங்க நகைகள் கண்காட்சி 6 நாட்கள் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 16 முதல் 21–ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் தனித்துவமான வைர மற்றும் தங்க நகைகள் ஏராளமான டிசைன்களில் இடம் பெறுகிறது. 

இந்த கண்காட்சியில் கிஸ்னா கலெக்ஷனின் 18 கேரட் வைரத்தில் செய்யப்பட்ட பிரத்யேக டிசைன் நகைகளும், மோதிரம், தோடு, தொங்கல், மாங்கல்யம், நெக்லஸ், வளையல்கள் மற்றும் மூக்குத்தி உள்ளிட்ட ஏராளமான தங்க நகைகளும் இடம்பெற உள்ளன.

இது குறித்து துர்காராம் கூறுகையில், மதிப்புமிக்க கிஸ்னா கண்காட்சியானது நேர்த்தியான நகைகளை காட்சிப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஒரு அருமையான தளத்தை வழங்கும் அதேசமயம் வாடிக்கையாளர்களுடனான நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது. இந்த கண்காட்சியில் வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு 1 வருட இலவச நகைக் காப்பீடு, நகைகளை விற்பனை செய்யும்போது 90 சதவீதம் திரும்பப் பெறும் மதிப்பு மற்றும் விலையில் இருந்து 95 சதவீத எக்சேஞ்ச் சலுகை உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது. கூடுதலாக, வாழ்நாள் முழுவதும் தாங்கள் வாங்கிய நகைகளுக்கு மெருகூட்டல் மற்றும் பழுதுபார்க்கும் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, 1 வருடத்தில் 0.05 சென்ட் வரை வைரத்தை மாற்றுவதற்கான உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான டிசைன்களில் நகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருப்பதோடு, சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் இது குறித்து கூறுகையில், காலத்தால் அழியாத கிளாசிக் முதல் நவீன மற்றும் நாகரீகமான பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்ட நகைகளின் தொகுப்பை வழங்கும் இந்தக் கண்காட்சி, வாடிக்கையாளர்களுக்கு நகை உலகில் சமீபத்திய போக்குகளை குறித்து அறிந்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது. கிருஷ்ணா ஜூவல் பார்க் ஷோரூமில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அனைவரும் வருகை தந்து புதிய டிசைன் நகைகளை பார்க்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இந்த கண்காட்சியில் சிறந்த மற்றும் பிரீமியம் தரத்திலான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை உங்களுக்கு மகிழ்ச்சியான சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று தெரிவித்தார்.

கிஸ்னா மற்றும் கிருஷ்ணா ஜூவல் பார்க் ஆகியவை வைர நகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலக அளவில் சிறந்த பிராண்டாக விளங்குகின்றன. இவை இரண்டும் இணைந்து இந்த கண்காட்சியை இங்கு நடத்துவதன் மூலம் அது வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத சிறந்த அனுபவமாக இருக்கும். சில்லறை வர்த்தகம் மூலம் தனது வணிக வளர்ச்சியை விரைவுபடுத்த கிஸ்னா நாடு முழுவதும் பிற நிறுவனங்களுடன் இணைந்து தனது ஷோரூம்களை திறந்து வருகிறது. கடந்த ஆண்டு சிலிகுரியில் திறக்கப்பட்ட இதன் முதல் பிரத்யேக ஷோரூமை தொடர்ந்து ஐதராபாத், ஹிசார், அயோத்தி, பரேலி, ராய்பூர், புதுடெல்லி, மும்பை மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் இதன் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக இந்நிறுவனம் பல்வேறு நகரங்களில் ஷோரூம்களைத் திறந்து வருவதன் மூலம் அதன் செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.  

 

கிஸ்னா வைரம் மற்றும் தங்க நகைகள் பற்றி:

கடந்த 2005–ம் ஆண்டு துவங்கப்பட்ட கிஸ்னா, நாட்டிலுள்ள 28 மாநிலங்களில் 3500க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன், இந்தியாவின் அதிக விற்பனையாகும் நகை பிராண்டுகளில் ஒன்றாக வேகமாக வளர்ந்துள்ளது. 14 கேரட் மற்றும் 18 கேரட் வைரத்தில் செய்யப்பட்ட பிரத்யேக டிசைன் நகைகளும், மோதிரம், தோடு, தொங்கல், மாங்கல்யம், நெக்லஸ், வளையல்கள் மற்றும் மூக்குத்தி உள்ளிட்ட ஏராளமான தங்க நகைகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதன் ஒவ்வொரு நகையும் 100% சான்றளிக்கப்பட்டவை மற்றும் HUID ஹால்மார்க் செய்யப்பட்டவை ஆகும். இது மிக உயர்ந்த தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.

ஹரி கிருஷ்ணா குழுமத்தைச் சேர்ந்த கிஸ்னா வைரம் மற்றும் தங்க நகைகள், புகழ்பெற்ற வைர உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக உலகளாவிய வைரத் தொழிலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.




Recommended For You