திருவொற்றியூரில் அங்கன்வாடி மையம் மற்றும் அரசு பள்ளி வகுப்பறை அடிக்கல் நாட்டு விழா.!

PUBLISHED:02-Dec-2023

சென்னை திருவொற்றியூர் தொகுதி 14வது வார்டுக்கு உட்பட்ட புதிய காலனி பகுதியில் CPCL நிறுவனத்தின் (CSR) நிதியில் 35 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அங்கன்வாடி மையம்  கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி , திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் , திருவொற்றியூர் 1வது மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் பங்கேற்று அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து காலடிப்பேட்டை அரசு பள்ளியில் IOCL நிறுவனத்தின் CSR நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டும் கட்டுமான பணிக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி , திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் , திருவொற்றியூர் 1வது மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர்  அடிக்கல் நாட்டி வைத்தனர்.

இதில் அயலக அணி மாவட்ட தலைவர் லயன் எஸ்.டி.சங்கர் , 14வது  மாமன்ற உறுப்பினர் பானுமதி சந்தர் , 14வது (அ) வட்ட செயலாளர் ஏகா.கார்த்திகேயன் , 14வது வட்ட செயலாளர் சி.சந்தர் , சி.பி.சி.எல் அதிகாரிகள் ,  மாநகராட்சி அரசு அதிகாரிகள் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You